தெமியார் மக்கள்

தெமியார் மக்கள்
Temiar People
Orang Temiar
Mai Sero'
பேராக், சுங்கை சிப்புட் பகுதியில் சும்பிட் ஊதுளியைப் பயன்படுத்தும் தெமியார் இனத்தவர், (2022)
மொத்த மக்கள்தொகை
40,000–120,000 [1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
பேராக் பகாங் கிளாந்தான்
மொழி(கள்)
தெமியார் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
ஆன்மவாதம்; இசுலாம், கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
செமாய் மக்கள்

தெமியார் அல்லது தெமியார் மக்கள் (ஆங்கிலம்: Temiar People; மலாய்: Orang Temiar; Mai Sero) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் செனோய் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆகும்.

தெமியார் மக்கள் என்பவர்கள் தெமியார் மொழியைப் பேசுகிறார்கள். தெமியார் மொழி (Temiar Language) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (Austroasiatic Languages) பெரும் மொழிக் குடும்பத்தில்; அசிலியான் மொழிகள் (Aslian Languages) துணைக் குடுமபத்தின்; செனோய மொழிகள் (Semelaic Languages) பிரிவில் ஒரு மொழியாகும்.[2]

தெமியார் மக்கள், தீபகற்ப மலேசியாவின் பேராக், பகாங், கிளாந்தான் மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.[3]

பொது

[தொகு]
தெமியார் பெண்கள்

தெமியார் மக்களின் மொத்த மக்கள் தொகை 40,000 முதல் 120,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர்; அதே வேளையில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் நகர்ப் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.[4]

தெமியார் மக்கள் பாரம்பரியமாக ஆன்மவாதிகள் (Animists); இயற்கை, கனவுகள் மற்றும் ஆன்மீக முறையில் குணமடையச் செய்யும் முறைப்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.[4][5]

அவர்களின் நாட்டுப்புற நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக செவாங் (Sewang) எனும் பாரம்பரிய நடனமும் தெமியார் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.[6]

தெமியார் மக்கள் தொகை

[தொகு]

தெமியார் மக்கள் தொகை பின்வருமாறு:-

ஆண்டு 1930s[7] 1960[8] 1965[8] 1969[8] 1974[8] 1980[8] 1991[9] 1993[9] 1996[8] 2000[10] 2003[10] 2004[11] 2010[1]
மக்கள் தொகை 2,000 8,945 9,325 9,929 10,586 12,365 16,892 15,122 15,122 17,706 25,725 25,590 30,118

குடியேற்றப் பகுதிகள்

[தொகு]
தெமியார் மக்களின் செவாங் பாரம்பரிய நடனம்

தீபகற்ப மலேசியாவில் தெமியார் மக்களின் முக்கிய குடியிருப்புகள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  2. Kyōto Daigaku. Tōnan Ajia Kenkyū Sentā (2001). Tuck-Po Lye (ed.). Orang asli of Peninsular Malaysia: a comprehensive and annotated bibliography. Center for Southeast Asian Studies, Kyoto University. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 49-016-6800-5.
  3. Tom Güldemann; Patrick McConvell; Richard A. Rhodes, eds. (2001). The Language of Hunter-Gatherers. Cambridge University Press. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-070-0368-7.
  4. 4.0 4.1 Southeast Asia Link. "Temiar of Malaysia". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
  5. Andy Hickson. "The Temiars". Temiar Web. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
  6. Kenny Mah (3 March 2016). "'Khabar dan Angin': Three artists explore faith in Kelantan". The Malay Mail Online. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  7. P. Boomgaard (1997). P. Boomgaard, Freek Colombijn & David Henley (ed.). Paper landscapes: explorations in the environmental history of Indonesia. KITLV Press. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-671-8124-2.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Nobuta Toshihiro (2009). "Living on the Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  9. 9.0 9.1 Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-90730-15-1. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
  10. 10.0 10.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  11. Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.
  12. Kyōto Daigaku. Tōnan Ajia Kenkyū Sentā (2001). Tuck-Po Lye (ed.). Orang asli of Peninsular Malaysia: a comprehensive and annotated bibliography. Center for Southeast Asian Studies, Kyoto University. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 49-016-6800-5.
  13. Sabihah Ibrahim (1989). "Universiti Malaya. Jabatan Antropologi dan Sosiologi". Hubungan etnik di kalangan Orang Asli: satu kajian etnografi terhadap orang Temiar di Kampung Chengkelik, RPS Kuala Betis, Kelantan. Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya.
  14. Siew Eng Koh (1989). "Universiti Malaya. Jabatan Antropologi dan Sosiologi". Orang Asli dan masyarakat umum: satu kajian etnografi terhadap komuniti Temiar di Kampung Merlung, rancangan pengumpulan semula [RPS] Kuala Betis, Kelantan. Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya.
  15. Angain Kumar (1–15 October 2014). "Tonggang: A Temiar Settlement" (PDF). Ipoh Echo. பார்க்கப்பட்ட நாள் 2018-01-18.
  16. Earl of Cranbrook, ed. (2013). Key Environments: Malaysia. Elsevier. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14-832-8598-6.

சான்று நூல்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]