தெய்யம்

முத்தப்பன் தெய்யம்
മുച്ചിലോട്ടു ഭഗവതി തെയ്യം
കുണ്ടാർ ചാമുണ്ഡി തെയ്യത്തിന്റെ അഗ്നിപ്രവേശം
ചാമുണ്ഡി തെയ്യത്തിന്റെ മോന്തിക്കോലം
പുതാടി ദൈവം

தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு நடனக் கலையாகும். கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டவுடன் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒரு நடன வகை. தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப்படும் வேண்டுதலாக இதனை ஆடுவர்[1]. இந்த ஆட்டக்கலை "தெய்யாட்டம்" எனவும் தெய்யத்தின் வேடத்தை "தெய்யக்கோலம்" என்றும் வழங்குகிறார்கள்.

தெய்வம் என்ற சொல்லில் இருந்தே தெய்யம் என்பது பிறந்திருக்கிறது. அம்மனே ஆடுகின்ற தெய்வீக நடனமாக இது கொள்ளப்படுகின்றது.

ஆடும் முறை[தொகு]

தெய்யம் நடனத்தை ஆண்களே பெண்கள் வேடமிட்டு ஆடுகின்றனர். இவர்கள் பெண்களுக்கான, அழகான வண்ணம் கொண்ட ஆடைகளையும், சில சமயங்களில் பச்சைப் பனை ஓலைகளை ஆடையாக உடுத்தியும், பித்தளை ஆபரணங்களை உடலெங்கும் அணிந்து கொண்டும், அச்சமூட்டும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொண்டும், மிகப்பெரிய தலைக்கவசங்களைப் பொருத்திக் கொண்டும் ஆடுவர்.

தெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் அம்மனே தம்மை ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் ஆடுவர். ஆட்டத்தின் போது ஒரு அசரீரியாக, அருள்வாக்காக அம்மன் பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாகவும், அம்மன் ஆசி வழங்குவதாகவும் தெரிவிப்பார்கள்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. வையவன், பக்கம் 182
  2. கேரளத்தின் பல்வகை நாட்டியங்கள், வீரகேசரி, ஆகத்து 20, 2011

துணைநூற்பட்டியல்[தொகு]