தெற்காசிய இனக்குழுக்களின் மரபியல், தொல்மரபியல் துறைகள் அவ்வினக்குழு மக்களின் மரபியல் வரலாற்றை இனங்காண முயல்கின்றன. ஐரோப்பாசிய கண்ட மக்களின் மரபியல் பரவலை அறிய, இந்தியாவின் புவியியல் இருப்பிட அமைவால் இந்திய மக்களின் மரபியல் பரவலாய்வு இன்றியமையாததாகிறது.
ஊன்குருத்து மரபன் வேறுபாட்டாய்வுகள் இந்தியத் துணைக்கண்ட மக்கள்தொகையின் மரபியல் ஒற்றுமையைக் காட்டுகின்றன.[1][2][3][4] ஒய் குறுமவக வேறுபட்டாய்வு, தனிபண்பக மரபனியல் வேறுபாட்டாய்வு முடிவுகள் பல்வகைகளில் வேறுபட்டைக் காட்டுகின்றன. என்றாலும் சில ஆய்வாளர்கள் ஊன்குருத்துவகைகளின் தொகுதிமரபு மூதாதைக் கணுக்கள் யாவும் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தோன்றியவை என வாதிடுகின்றனர். இந்திய மக்கள்தொகையின் அண்மை மரபன்தொகை ஆய்வு பெரும்பாலான இந்தியர்கள் வட இந்திய மூதாதையர் இருந்து தோற்றங் கண்டதாகவும் இவர்கள் நடுவண் ஆசியா, நடுவண் கிழக்குப் பகுதி, ஐரோப்பியா மக்கள்தொகையுடன் உறவு பூண்டுள்ளதாகவும் ஆனால் தெற்கு இந்திய மூதாதையர் துணைக்கண்டத்துக்கு வெளியில் உள்ள மக்களோடு அவ்வளவு நெருக்கம் உள்ளவராக இல்லையெனவும் தெரிவிக்கின்றது.[5]
நடுவண் ஆசியா, நடுவண் கிழக்குப் பகுதி, ஐரோப்பா பகுதிகளில்அமைந்த ஊன்குருத்து மரபன் வகைகளின் தொகுதிமரபுத் தருவின் மூதாதையர் கணு தெற்காசியாவிலும் ஓரளவு உயர்நிகழ்தகவுடன் அமைகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. பொது மூதாதைக் கணுவில் இருந்தான இவ்விலகல் இ.மு 50,000 ஆண்டுகட்குச் சற்றே முன்பாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] இந்தியாவின் பெரும்பாலான தாய்வழிக் கால்வழிகள், அதாவது ஊன்குருத்து மரபனின் ஒருமைப் பண்புக் குழுக்கள், எம் வகை ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழு, ஆர் வகை ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழு, யூ வகை ஊன்குருத்து ஒருமைப் பண்புக் குழு ஆகிய வகைப்பட்டனவாக உள்ளன. இவை இணைந்த காலம் தோராயமாக இ. மு 50,000 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6]
பெரும்பாலான தந்தைவழிசர்ந்த கால்வழிகளாக, அதாவது ஒய் குறுமவகக் கால்வழிகளாக, ஆர்1ஏ வகை, ஆர்2ஏ வகை, எச் வகை, எல் வகை, ஜே2 வகை ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்கள் அமைந்துள்ளன.[7] பல ஆய்வாளர்கள் ஒய் மரபன்சார் ஆர்1ஏ1 ஒருமைப் பண்புக் குழு (எம்17) இந்தியத் தோற்றவகை என வாதிக்கின்றனர்.[8][9] என்றாலும், ஆர்1ஏ1 வகை நடுவண் ஆசியாவிலும் தோன்றியிருக்கலாம் எனும் முன்மொழிவுகளும் பலரால் பரிந்துரைக்கப்படுகின்றன.[10][11]
தெற்காசியர்களின் மரபணு மற்றும் முக்கிய பரம்பரை ஐரோப்பிய, அரபு மற்றும் பெர்பர் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையது மற்றும் மேற்கு ஆசியா அல்லது தெற்காசியாவில் தோன்றியது. இந்திய மக்கள் தொகை முக்கியமாக காகசாய்டு இனத்துடன் தொடர்புடையது மற்றும் ஐரோப்பிய, அரபு மற்றும் வட ஆபிரிக்க மக்களுடன் நெருக்கமாக தொடர்புடையது.[12][13] மொண்டல் 2017 இன் படி, இந்த வலுவான மரபணு தொடர்பு பண்டைய மாதிரிகளிலும் காணப்படுகிறது மற்றும் பகிரப்பட்ட பரம்பரையின் இந்திய தோற்றத்தை சுட்டிக்காட்டக்கூடும்.[14] ஒரு முழுமையான மரபணு பகுப்பாய்வு (நேச்சர் (ஜர்னல்) 2019 இல் வெளியிடப்பட்டது) இந்திய, ஐரோப்பிய, அரபு மற்றும் பெர்பர் மக்கள் நெருங்கிய தொடர்புடையது மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஆசிய மக்களிடமிருந்து வேறுபடுத்தப்படலாம் என்று முடிவுசெய்தது.[15]
பல்வேறு மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகள் மூன்று மனித மக்கள் குழுக்கள் உள்ளன என்று முடிவு செய்தன. "காகசாய்டு" (மேற்கு-யூரேசியன் தொடர்பான) மானுடவியல் குழு கோகோயிட் இனம் என்ற கருத்துடன் ஒத்துப்போகின்ற தனித்துவமான மரபணு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை யுவான் 2019 கண்டறிந்துள்ளது. இந்தியர்களும் ஐரோப்பியர்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று அவர்கள் முடிவு செய்தனர்.[16] சென் 2020 இந்தியர்கள், அரேபியர்கள், பெர்பர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இடையே நெருங்கிய உறவுக்கு கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்தது. புதிய மரபணு பொருள் ஒரு எளிய "ஆப்பிரிக்காவிற்கு வெளியே குடியேற்றத்திற்கு" முரணானது என்று அவர் முடிக்கிறார். இந்தியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான பிராந்தியத்தில் காகசாய்டு இனத்திற்கு ஒரு வேரை அவர்கள் முன்மொழிகின்றனர்.[17]
இந்தியத் துணைக்கண்ட மாந்த ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக எம் வகையும் ஆர் வகையும் யூ வகையும் அமைகின்றன. இவற்றில் யூ வகை ஆர் வகையில் இருந்து வந்த்தாகும்.[7] நெடுங்கால "முரணியல் ஒய்- குறுமவகப் படிமம்" கருதுத்துக்கு ஆதரவாக[8] சுட்டீபன் ஓப்பனீமர் 50,000-100,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் உருவாகிய நான்கு தாய்வழிக் கால்வழிகளில் இருந்தே, அதாவது இந்தியாவில் தோன்றிய நான்கு ஏவாள்களில் இருந்தே, அனைத்து நடுவணாசியா, நடுவண் கிழக்குப் பகுதி, ஐரோப்பா சார்ந்த மாந்த இனத் தாய்வழியிலான கால்வழிகள் தோன்றியிருத்தல் வேண்டும் என நம்புகிறார்[18]
ஊன்குருத்து மரபன் சார்ந்த எம் வகைப் பேரியல் ஒருமைப் பண்புக் குழு முந்தாசியத் தாய்வழிக் கால்வழிக் கொத்தைச் சார்ந்ததாகும்.[6]
இந்தியாவில் உள்ள எம் ஒருமைப் பண்பு வகையின் துணைக்கிளைகள், ஒப்பீட்டளவில் கிழக்காசிய மங்கோலிய மக்கள்தொகையின் துணைக் கால்வழிகளைவிட கூடுதலாகஅமைந்துள்ளன.[6] இந்த எம் வகைத் தொகுதிமரபின் ஆழ்ந்த வேர்கள், கிழக்காசியாவையோ மற்றப் பகுதிகளையோ ஒப்பிடும்போது இந்தியாவில் நிலவுதல், இந்தத் துணைக்குழுக்கள் இந்தியாவிலேயே தோன்றின என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆழமான வேர்கள் மொழிசாராது அனைத்து மொழிக்குழுக்களிலும் நிலவுகின்றன.[19]
உண்மையில் நடுவண் ஆசியாவின் ஊன்குருத்து சார்ந்த எம் வகைகால்வழிகள் அனைத்துமே இந்திய எம் வகை ஒருமைப் பண்புக் குழுக்களைச் சாராமல் கீழை ஐரோப்பாசிய மங்கோலிய வகை சார்ந்தனவாகவே அமைதலைக் காணலாம். இது துருக்கிபேசும் நடுவண் ஆசியாவிலிருந்து பெருந்திரளான மக்கள்தொகை நகர்வேதும் இந்தியாவுக்கு வந்து குடியேரவில்லை என்பதைக் காட்டுகிறது. ஐரோப்பியர்களீல் எம் வகை ஒருமைப் பண்புக் குழுக்கள் இல்லாமையும் ஆனால் அவை ஒப்பீட்டளவில் உயர்நிகழ்வெண்ணில் இந்தியர்களிலும் கிழக்காசியர்களிலும் நடுவண் ஆசிய மக்கள்தொகைகளிலும் அமைவதும் மேற்கு ஐரோப்பாசியா தந்தைவழிக் கால்வழிகள் தெற்காசியக் கால்வழிகளிச் சார்ந்திருப்பதற்கு எதிர்மாறாக உள்ளது.[6]
புத்தூழி உடற்கூற்றியல் உள்ள மாந்தரினம் ஐரோப்பாசியாவில் தொடக்கத்தில் நிலைத்து வாழ்ந்த நிலையில்தான் தெற்கு, தென்மேற்கு ஆசியாவிலும் உள்ள பெரும்பாலான ஊன்குருத்து மரபன்களின் வரம்புகள் உருவாகி இருக்கவேண்டும்.[20]
ஒருமைப் பண்புக் குழு | முதன்மைத் துணைக்கிளைகள் | மக்கள்தொகைகள் |
---|---|---|
M2 | M2a, M2b | வடமேற்கைத் தவிர துணைக்கண்ட முழுதும் பரவி உள்ளது. வங்க தேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாட்டுக் கடற்கரை, சிறீலங்காவில் செறிவுமிகுதி |
M3 | M3a | வடமேற்கைத் தவிர துணைக்கண்ட முழுதும் பரவி உள்ளது. இராஜத்தனிலும் மத்தியப் பிரதேசத்திலும் 20% அளவும் மராட்டியம், உத்தரப் பிரதேசம், ஆரியானா, குஜராத், கருநாடகம் ஆகிய பகுதிகளில் அடர்வாகவும் பரவி உள்ளது |
M4 | M4a | - |
M6 | M6a, M6b | காழ்சுமீர், வங்கால விரிகுடாக் கடற்கறை, சிறீலங்கா |
M18 | துணைக்கண்ட முழுதும் பரவி உள்ளது. இராஜத்தானிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் செறிவு மிகுதி. | |
M25 | இந்தியா முழுவதிலும் நன்கு பரவியுள்ளது(வெளியே மிக அருகியுள்ளது) மேற்கு மராட்டியம், கேரளா, பஞ்சாப் |
பேரியல் ஒருமைப் பண்புக் குழுவாகிய என் வகையின் மிகப்பெரும் பழந்துணைப்பிரிவான ஆர் வகை, பிற 40% இந்திய ஊன்குருத்து மரபன்களில் அமைகிறது. இதன் மிகப் பழையதும் மிக முதன்மையானதுமாகிய துணைப்பிரிவான யூ வகை ஒருமைப் பண்புக் குழு மேற்கு ஐரோப்பாசியாவில் நிலவினாலும் அது தெற்காசியாவில், குறிப்பாக, இந்தியாவில் பல கிளைக்கவைகளைக் கொண்டுள்ளது.
முதன்மையான தெற்காசிய ஆர் வகை ஒருமைப் பண்புக் குழுக்கள்:[20]
ஒருமைப் பண்புக் குழு | மக்கள்தொகைகள் |
---|---|
R2 | துணைக்கண்டம் முழுவதிலும் விரிவாகப் பரவியுள்ளது. |
R5 | இந்தியா முழுவதிலும் விரிவாகப் பரவியுள்ளது . Peaks in coastal SW India |
R6 | இந்தியா முழுவதிலும் குறைந்த விகித்த்தில் பரவியுள்ளது . இது தமிழரிலும் காழ்சுமீரி மக்களிலும் உயரளவில் பரவியுள்ளது. |
W | பாக்கித்தானிலும் காழ்சுமீரிலும் பஞ்சாபிலும் காணப்படுகிறது. இதற்கும் கிழக்கில் இது அருகியுள்ளது. இந்தியாவில் இல்லவே இல்லை. |
ஊன்குருத்து மரபனின் யூ வகை ஒருமைப் பண்புக் குழு என்பது பேரியல் ஆர் வகை ஒருமைப் பண்புக் குழுவின் ஒரு துணைக் குழுவாகும்.[20] யூவகை ஒருமைப் பண்புக் குழுவின் பரவல் எம் வகை ஒருமைப் பண்புக் குழுவின் ஆடி த் தெறிப்புப் படிம்ம்போல் அமைகிறது: யூ வகை கிழக்காசியாவில் அமையாவிட்டாலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அடிக்கடி காணப்படுகிறது.[21] இந்திய யூ வகைக் கால்வழிகள் ஐரோப்பியக் கால்வழிகளில் இருந்து கணிசமாக வேறுபடுகிறது. இவற்றின் இணைவு ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் அமைகிறது.[1]
ஒருமைப் பண்புக் குழு | மக்கள்தொகைகள் |
---|---|
U2* | ( இணை ஒருமைப் பண்புக் குழு) அருகியே இந்தியத்துணைக் கண்டத்தின் வடக்கில் பரவியுள்ளது. இது தென்மேற்கு அரேபியாவிலும் காணப்படுகிறது. |
U2a | இது பாக்கித்தானிலும் வடமேற்கு இந்தியாவிலும் மிக அடர்வாக உள்ளது.கருநாடகத்தில் இது மிக உயர் அடர்த்தியோடு அமைகிறது. |
U2b | இது உத்தரப்பிரதேசத்தில் உயர்செறிவுடன்உம் பிற பகுதிகளில் ஓரளவும் குறிப்பாக, கேரளாவிலிலும் இலங்கையிலும் சிறப்பாகவும் அமைகிறது.இது ஓமனிலும் காணப்படுகிறது. |
U2c | இது வங்க தேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் மிக முதன்மை வாய்ந்த்தாக உள்ளது. |
U2l | தெற்காசியாவிலே உள்ள யூ துணைக்கவைகளில் மிகவும் முதன்மையானதாகும். இது உத்தரப்பிரதேசத்திலும் இலங்கையிலும்சிந்துவிலும் கருநாடகத்தின் சில பகுதிகளிலும் பத்து விழுக்காட்டுக்கும் கூடுத்லாக உயர்செறிவை அடைகிறது. ஓமனிலும் இது மிகச் சிறப்பாக்க் காணப்படுகிறது. இது மெற்கு ஐரோப்பசிய வகையாக பம்சத் முதலியோர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆனால் கிவிசில்டு முதலியவர்களால் இது கிழக்கு ஐரோப்பாசிய வகையாக குறிப்பாக இந்திய வகையாக குறிப்பிடப்படுகிறது. |
U7 | இந்த ஒருமைப் பண்புக் குழு குசராத்திலும் பஞ்சaபிலும் பாக்கித்தானிலும் கணிசமாக உள்ளது. இதன் தோற்ற இடமாக இந்தியக் குசராத்து இரானுமாக்க் கருதப்படுகிறது. ஏனெனில் அவ்விடத்தில் இருந்து இதன் wநிகழ்வெண் மெற்கிலும் கிழக்கிலும் குறைந்து கொண்டே வருகிறது. |
இந்தியத் துணைக்கண்ட பேரியல் ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாவன: ஒருமைப் பண்புக் குழு எஃப்-எம் 89/எஃப் வகை ஒருமைப் பண்புக் குழுவின் கால்வழிகளான ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆர் வகை (பெரும்பாலும் ஆர்2ஏ வகை, ஆர்2 வகை, ஆர்1ஏ1 வகை), எல் வகை, எச் வகை, ஜே வகை (பெரும்பாலும் ஜே2).[7]
தெற்காசிய ஒய் குறுமவக மரபன் தொகுதியாக அமையும் ஐந்து பெரும் கால்வழிகளாவன: R1a, R2, H, L, J2. இவற்றின் புவிசார் தோற்றம், நடந்துள்ள சிற்றளவு ஆய்வுப்படி, பின்வருமாறு:
தெற்காசியப் பேரியல் ஒய் குறுமவக்க் கால்வழிகள்: | H | J2 | L | R1a | R2 |
---|---|---|---|---|---|
பாசு முதலியோர் (2003) | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | நடுவண் ஆசியா | உரையேதும் இல்லை |
கிவிசில்டு முதலியோர் (2003) | இந்தியா | மேற்காசியா | இந்தியா | தெற்காசியா, மேற்காசியா | தென்நடுவண் ஆசியா |
கோர்தவுக்சு முதலியோர் (2004) | இந்தியா | மேற்கு அல்லது ந்டுவண் ஆசியா | நடுவண் கிழக்கு ஆசியா | நடுவண் ஆசியா | தென்நடுவண் ஆசியா |
சென்குப்தா முதலியோர் (2006) | இந்தியா | நடுவண் கிழக்கு, நடுவண் ஆசியா | தென்னிந்தியா | வட இந்தியா | வட இந்தியா |
தன்சீம் முதலியோர் (2006) | இந்தியா | இலெவாண்ட் | நடுவண் கிழக்கு ஆசியா | தெற்காசியா, நடுவண் ஆசியா | தெற்காசியா, நடுவண் ஆசியா |
சாகு முதலியோர் (2006) | தெற்காசியா | அண்மைக் கிழக்கு நாடுகள் | தெற்காசியா | தெற்காசியா அல்லது மேற்காசியா | தெற்காசியா |
மீராபால் முதலியோர் (2009) | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | வடமேற்கு அல்லது நடுவண் ஆசியா | உரையேதும் இல்லை |
சாவோ முதலியோர் (2009) | இந்தியா | நடுவண் கிழக்கு ஆசியா | நடுவண் கிழக்கு ஆசியா | நடுவண் ஆசியா ஆல்லது மேற்கு ஐரோப்பாசியா | நடுவண் ஆசியா ஆல்லது மேற்கு ஐரோப்பாசியா |
சர்மா முதலியோர் (2009) | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | உரையேதும் இல்லை | தெற்காசியா | உரையேதும் இல்லை |
தங்கராசு முதலியோர் (2010) | தெற்காசியா | அண்மைக் கிழக்கு நாடுகள் | அண்மைக் கிழக்கு நாடுகள் | தெற்காசியா | தெற்காசியா |
எல் வகை ஒருமைப் பண்புக் குழு புதிய கற்காலப் பரவலைக் காட்டுகிறது.[22] The clade is present in the Indian population at an overall frequency of ca.7-15%.[8][10][23][24] தொல் இனக்குழுக்களில் அல்லது பழங்குடிகளில் எல் வகைப் பண்புக் குழு காணப்படுவதில்லை (ca. 5,6-7%)[8][10][24]
தொடக்கநிலை ஆய்வுகள் (வெல்சு முதலியோர் ஆய்வுகள்) வழியாக, அதாவது, தமிழ் பேசும் 84 இடையர்கள் (யாதவர்கள்). கள்ளர்கள் தொடர்பான ஆய்வுத்தகவல்களின் விரிவாக்கத்தின்வழியாக, தென்னிந்தியாவில் உயர்நிகழ்வெண்ணில் (ஏறத்தாழ 50%) எல் வகை ஒருமைப் பண்புக் குழு நிலவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 84 பேரில் 40 பேர்(தோரா. 48%) பேரில் உள்ள எம்20 சடுதிமாற்றம் எல் வகை ஒருமைப் பண்புக் குழு நிலவலை வரையறுக்கிறது.
L3 (M357) ஒருமைப் பண்புக் குழு, புருசோ மக்களில் தோரா. 12% அளவிலும்[25]) பாசுத்துன் மக்களில் தோரா. 7% அளவிலும்[25]), பொதுவாக பாக்கித்தனர்களில் தோரா. 2% அளவிலும்[25]). பக்கித்தானின் தென்மேற்கு பலோச்சித்தானில் மக்ரான் கடற்கரை நெடுகே சிந்து சமவெளி வரை (28%) அளவில் மிக உயர்வெண்ணிலும் அமைகிறது.
L3a (PK3) தோராயமாக 23% அளவுக்கு வடமேற்குப் பாக்கித்தானில் நியூரித்தானர்களில் காணப்படுகிறது.[25]
தெற்காசியாவில் எச் வகை ஒருமைப் பண்புக் குழு (ஒய்-மரபன் ) உயர்நிகழ்வெண்ணில் அமைகிறது.இது தெற்காசியாவுக்கு வெளியே அரிதாகவே அமைகிறது. ஆனால் உரோமானிக் குழுவில் பரவலாக அமைகிறது. குறிப்பாக, H-M82 துனைக்குழு பரவலாக உள்ளது. பொதுவாக, இது அடிக்கடி இந்தியா, பாக்கித்தான், சிறிலங்கா, நேபாளம், மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் அமைகிறது.இதன் மூன்று கிளைகளுமே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ளன.
இது எஃப் பண்புக் குழுவுவின் ஒரு கிளையாகும்; மேலும் ஜிஎச்ஐஜேகே ஒருமைபண்புக் குழுவின் அல்லது குடும்பத்தின் கால்வழியாகத் தோன்றியதாகும். இது தெற்காசியாவில் 30,000 முதல் 40,000 ஆண்டுகட்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படுகிறது.[26] இது இந்தியத் துணைக்கண்டப் பழைய கற்காலப் பழங்குடிகளில் காணப்படும் முதன்மையான ஒய் குறுமவக ஒருமைப் பண்புக் குழுவாகும்.தெற்காசியாவின் சில தனியர்களில் மிக அருகிய துணைக்குழுவாகிய H3 (Z5857) கிளைப்பிரிவும் அமைகிறது.[26] H ஒருமைப் பண்புக் குழு குறிப்பிட்ட மக்கள்தொகைகளில் மட்டுமே அமைவதில்லை. எடுத்துகாட்டாக, H ஒருமைப் பண்புக் குழு தெற்காசிய இந்தோ-ஆரியச் சாதிகளில் 28.8% அளவில் அமைகிறது.[8][24] தெற்காசியப் பழங்குடிகளில் 25-35% அளவில் காணப்படுகிறது.[10][24]
தெற்காசியாவில் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் R2 கால்வழிகள் 10-15% அளவிலும் பாக்கித்தானில் 7-8% அளவிலும் அமைகின்றன. குறைந்தது 90% அளவு R-M124 தனியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகின்றனர்.[27] ஆனால் காக்காசசிலும் நடுவண் ஆசியாவிலும் இக்கால்வழிகள் குறைவான நிகழ்வெண்ணிலேயே அமைகின்றன.
இந்தியாவில் கணிசமான உயர்நிகழ்வெண்ணில் தென்னிந்திய மக்களில் 26% அளவிலும் மேற்குவங்கத்தில் 23% அளவிலும் புது தில்லி இந்துமக்களில் 20% அளவிலும் பீகாரின் பனியா மக்களில் 36% அளவிலும் அமைகிறது. பழங்குடிகளில், மேற்குவங்க உலோத்தாக்களில் 43% அளவிலும் குஜராத்தின் பில் மக்களில் 18% அளவிலும் உள்ளது. தென்னிந்தியாவின் பள்ளர்களில் 14% அளவிலும் செஞ்சு மக்களில் 20% அளவிலும் அமைகிறது. வட இந்தியாவின் தாரு இனக்குழுவில் இது 17% அளவில் உள்ளது.[4]
இது பிராமணர்களில் உயர்நிகழ்வெண்ணில் உள்ளது. பஞ்சாப் பிராமணரின் பல குழுக்களில் 25% அளவிலும் வங்க பிராமணரில் (22%) அளவிலும் வங்க்கயத்தா பிராமணரில் 21% அளவிலும் கொங்கணாத்த பிராமணரில் 20% அளவிலும் சதுர்வெதியரில் 32% அளவிலும் பார்கவரில் 32% அளவிலும் காச்மீரப் பண்டிதர்களில் 14% அளவிலும் இலிங்காயத்துப் பிராமணரில் 30% அளவிலும் அமைகிறது.[4]
வட இந்திய முசுலீம்களில் சுன்னிகளில் 11% அளவிலும் சியாக்களில் 9% அளவிலும் குஜராத்தின் மேற்குப் பகுதி தாவூதி போக்ரா முசுலீம்களில் 16% அளவிலும் தென்னிந்தியாவின் மாப்பிள்ளை முசுலீம்களில் 5% அளவிலும் உள்ளது.[28] பஞ்சாபின் 5% ஆடவரில் இக்கால்வழி அமைகிறது.
ஆர்2 ஒருமைக் குழு புருசோவினரில் 14% அளவில் உள்ளது.[25] அன்சா இனக்குழுவில் இது 18% அளவிலும் பார்சிகளில் இது 20% அளவிலும் அமைகிறது.
சிறிலங்காவின் சிங்களரில் R2 39% அளவாக அமைகிறது.
13% மாலதீவு மக்களில் R2 ஒருமைப் பண்புக் குழு அமைகிறது.[29]
நேபாளத்தில் R2 விழுக்காடு 2% முதல் 26% வரை வேறுபட்ட பல குழுக்களில் அமைவதாக ஆய்வுகள் அறிவித்துள்ளன. நேவார் இனக்குழுவில் 26% அளவு உயர்வெண்ணில் இது அமைகிறது;காத்மண்டு மக்களில் இது 10% அளவில் உள்ளது.
தெற்காசியாவில் பல மக்கள்தொகைகளில் R1a1 உயர்நிகழ்வெண்ணில் அமைகிறது.[9][30]
இதன் பெற்றோர் குழுவான R1a இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துவெளியிலோ ஐரோப்பாசியாவின் சுதெப்பியிலோ தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[31] இதர் கால்வழிக் கவப்பிரிவான R1a1 தெற்காசியாவில் செறிந்த உயர்நிகழ்வெண்ணில் உள்ளதால் அது தஎற்காசியாவில் தோன்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.[32][33][34] என்றாலும் இது தெற்காசியாவின் சாதிக்குழுக்களிலும் பழங்குடி இனக்குழுக்களிலும் சீரற்ற நிலையில் பரவியுள்ளதால் நடுவண் ஐரோப்பாசியாவில் தோன்றியிருக்க கூடுதல் வாய்ப்பும் அமைகிறது.[10][11]
இந்தியாவில், மேற்குவங்க பிராமணரில் (72%) அளவிலும்[30] கிழக்கில், கொங்கணாத்த பிராமணரில் (48%) அளவிலும் [30] மேற்கில், காத்ரிக்களில் (67%) அளவிலும்[32] in north and Iyengar Brahmins (31%)[30] தெற்கில். திராவிட மொழி பேசும் பல பழங்குடிகளில், செஞ்சு (26%) உட்பட இந்த ஒருமைப் பண்புக் குழு காணப்படுகிறது.[35] மேலும் இது ஆந்திரப்பிரதேச இடையரிலும் (யாதவரிலும்) தமிழ்நாட்டின் இடையரிலும் (யாதவரிலும்) கள்ளர்களிலும் நிலவுவதால், M17 சடுதிமாற்றம் தென்னிந்தியப் பழங்குடிகளில் பரவலாக அமைதல் தெளிவாகிறது.[35]
இவற்றோடு, அறுதி வடகிழக்கில் உள்ள மணிப்புரியின் மைத்தீயர்களிலும் (50%) [32] அறுதி வடமேற்கில் உள்ள பஞ்சாபிலும் (47%) புவியியலாகத் தொலைவில் உள்ள பழங்குடிகளிலும் (50%) [35] இது உயர்நிகழ்வெண்ணில் காணப்படுகிறது.
பாக்கித்தானில் சிந்து மாகாணத்திலும் அதற்குத் தெற்கிலும் உள்ள மொகன்னா இனக்குழுவினரில் 71% அளவிலும் கில்கித்-பால்டித்தனிலும் அதற்கு வடக்கிலும் உள்ள பால்டி இனக்குழுவினரில் 46% அளவிலும் R1a1a (M17) காணப்படுகிறது.[32]
சிறிலங்காவில், 13% அளவுக்குச் சிங்களரில் R1a1a (M17) காணப்படுகிறது.[35]
மாலத்தீவுகளில், 24% மாலத்தீவிய மக்களில் R1a1a (M17) காணப்படுகிறது.[29]
நேபாளத்தில், தேரைப் பகுதி சித்வான் மாவட்டத்தில் R1a1a 69% அலவில் காணப்படுகிறது.[36]
J2 வகை ஒருமைப் பண்புக் குழுவின் நிலவல் இந்தியத் துணைக்கண்டத்தில் புதிய கற்காலம் முதல் காணப்படுகிறது.[22] J2 பழங்குடிகளில் காணப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகள் (11%) ஆகும். J2 உயர்நிகழ்வெண்ணில் தென்னிந்தியச் சாதிக் குழுக்களில் (19%) வட இந்தியச் சாதிக் குழுக்களைவிடவும் (11%) பாக்கித்தானை விடவும் (12%) கூடுதலாகக் காணப்படுகிறது.[8] J2 தென்னிந்திய இடையர்களில் 20% அலவிலும் மேற்குவங்க உலோத்தா பழங்குடியில் 32% அளவிலும் காணப்படுகிறது.[சான்று தேவை] In Maldives, 22% of Maldivian population were found to be haplogroup J2 positive.[37]
இந்திய மரபன்தொகை வேறுபாட்டுப் பேராணையம்(2008) இந்தியத் துணைக்கண்ட மக்களை காக்காசியர்கள், மங்கோலியர்கள், ஆத்திராலியர்கள், நீக்ரோவியர்கள் என நான்கு புறவேற்றுமை வகைகளாகப் பிரிக்கிறது. மேலும் மொழிகளை இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிகள், திபெத்துப் பர்மிய மொழிகள், ஆத்திரோ-ஆசிய மொழிகள் என நான்காகப் பகுக்கிறது.[38] மூலக்கூற்று மாந்தரினவியல் மூன்று குறிப்பான்களைப் பயன்படுத்துகிறது. அவையாவன: ஊன்குருத்து மரபன் ஆய்வு (தாய்க்கால்வழி மரபுப்பேற்று ஆய்வு) (இது பலபுற வேற்றுமைகளையும் உள்ளடக்கியது), ஒய் பண்பக வேறுபாட்டு ஆய்வு (தந்தைக்கால்வழி மரபுப்பேற்று ஆய்வு), பாலினம்சாரா மரபன் வேறுபாட்டு ஆய்வு.[4]:04
ஊன்குருத்துக் குறுமகவக (பண்பக) மரபன் வேறுபாடு பற்றிய ஆய்வுகள் அனைத்தும் மொழி, சாதி, பழங்குடி வேறுபாடில்லாமல் இந்திய மக்கள்தொகையின் ஒருமையை அறிவித்துள்ளன.[1][2][3] கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவுக்குத் தெற்குத் தடம் வழியாக எம் ஒருமைப் பண்புக் குழு 60,000 ஆண்டுகட்கு முன்பே நிகழ்ந்த தொடக்கநிலைப் பரவலால் வந்திருக்கலாம்.[1]
தூமாசு கிவிசில்டும் மற்றோரும் இணைந்து 1999இல் நடத்திய ஆய்வின்படி, "ஐரோப்பாசிய மக்கள்தொகையில் விவரித்துள்ள பிற கால்வழிகளில் அமைந்துள்ள சிறுசிறு வேறுபாடுகள், அண்மைய நாடுவிட்டு நாட்டுப் புலம்பெயர்வுகள் இந்தியர்களின் தாய்மரபன் தேக்கக் கட்டமைப்பில் எவ்விதத் தாக்கத்தையும் விளைவிக்கவில்லை என்பதை உறுதி படுத்துகின்றன. இந்தியாவில் வேறுபாடுகள் இருந்தாலும் இவை வரம்புள்ள சில அடிப்படைக் கால்வழிகளில் இருந்தே முகிழ்த்துள்ளன. இவை பொதுவாக, ஐரோப்பாவிலும் பழைய உலகிலும் மாந்தர் பரவுவதற்கு முன்பே இடைநிலைப் பழங்கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும்பாலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன."[1] பாசுவும் மற்றோரும் 2003 இல் நடத்திய ஆய்வும் இந்தியத் தாய்க்கால்வழிகளின் ஒருமையை உறுதிப் படுத்துகிறது.[23]
ஒய் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடு பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், ஊன்குருத்துக் குறுமகவக (பண்பக) மரபன் வேறுபாட்டைவிட ஒய் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடுகள் தெளிவாக இருத்தலை உறுதிப் படுத்தியுள்ளன.ஆர்விக்சிதுவும் கிவிசில்டும் 2003 இல் நடத்திய ஆய்வு இந்திய த்ந்தைக் கால்வழிகளில் தொல்பழம் கால முதலே மரபியல் இணைவுத் தொடர்ச்சி நிலவுவதையும், பம்சதும் மற்றோரும் 2001 இல் நடத்திய ஆய்வு இந்திய தந்தைவழிக் காலவழிகளுக்கும் ஐரோப்பாசியத் தந்தைவழிக் கால்வழிகளுக்கும் உள்ள உறவுநெருக்கத்தை முன்மொழிகிறது. மேலும் இவ்வாய்வு தென்னிந்தியச் சாதிகளில் சாதித் தரவரிசையும் இருப்புகளும் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு நெருக்கமாகப் பொருந்தி வருவதையும் சுட்டியுள்ளது.[39]
பாசுவும் மற்றோரும் 2003 இல் மேற்கொண்ட ஆய்வில் ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகள் இந்தியாவில் முதலில் வடமேற்குக் கனவாய் வழியாகவும் சற்றுப் பின்னர் அதிற் சிலர் வடகிழக்குக் கணவாய் வழியாகவும் வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.[23] குமாரும் மற்றோரும் 2007 இல் நடத்திய ஆய்வில் 25 இந்திய நாட்டு ஆத்திரோ-ஆசியப் பழங்குடிகளைக் கருதினர்,அந்த ஆய்வில் இந்திய நாட்டு ஆத்திரோ-ஆசிய மக்கள்தொகையின் துணைமொழிக் குழுவினர் வலிமையான பொது தந்தைவழி மரபியல் பிணைப்பு நிலவுவதாக அறீத்துள்ளனர்.[40] முகர்ஜியும் மற்றோரும் 2001 இல் நடத்திய ஆய்வில் வட இந்தியர்களை மேற்காசிய, நடுவண் ஆசிய மக்கள்தொகைகட்கு இடைநிலையினதாகப் பாகுபடுத்துகின்றனர்.[41] கோர்தவுக்சும் மற்றோரும் 2004 இல் நடத்திய ஆய்வில் இந்தியச் சாதிக் குழுக்களின் மக்கள்தொகை நடுவண் ஆசிய மக்கள்தொகைக்கு நெருக்கமாக அமைவதாக்க் கூறுகின்றனர்.[24] சாகு குழுவினரும் சென்குப்தா குழுவினரும் 2006 இல் நடத்திய ஆய்வில் இந்தியச் சாதி குழுவினரில் அண்மையில் இனக்கலப்பேதும் நிகழவில்லை எனக் கூறுகின்றனர்.[8][9] Sanghamitra Sahoo concludes his study with:[9]
வேளாண்மை தோன்றிய காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்களின் தந்தைக் கால்வழியின் தோற்றத்தை நடப்புச் சான்றுகளை வைத்து தெற்காசியாவுக்கு அப்பால் தேடவேண்டியதில்லை. நுணுகி ஓர்ந்துப் பார்க்கும்போது, வடமேற்குக் கணவாய் வழியாக மக்களும் மொழிகளும் வேளாண்மையும் ஒருங்கினைந்தே நுழைவுற்ரன எனும் தொடர்ந்து பரப்ப்ப்படு கருத்துரையை ஏற்பது மிகவும் அரிதே. இந்தியச் சாதிக் குழுக்களின் தந்தைக் கால்வழி சார்ந்த J2, L, R1a, R2 ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்களின் பிணைப்பின் அண்மைக்கால தோற்றம் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியே தேடுவதைத் தள்ளிவிடலாம். நமது கண்டுபிடிப்புகள் F,* H ஒருமைப் பண்புக் குழுக்கள் துணைக்கண்டத்திலேயே தோன்றியதென அறிவித்தாலும் நடுவண் ஆசியத் தொடர்பற்றிருந்தாலும், J2 ஒருமைப் பண்புக் குழுவின் அண்மைய மேற்காசியத் தொடர்புள்ளமையை ஏற்கப்படவேண்டியதே. நடப்பு ஒருமைக் குழுக்களது பரவலின் நிகழ்வெண்கள், கால்வழிகளைக் கருதாவிட்டால், பேரலவில் புவியியலாகத் தோன்றியனவே தவிர பண்பாட்டுக் காரணிகளால் ஏற்பட்டனவல்ல. ஆனால் இதற்கு முரணாக, வடகிழக்கு இந்தியாவின் பழங்குடிக் குழுக்களில் பேரளவு மக்கள்தொகைப் புலம்பெயர்வு நடந்த்தற்கு மரபன், பண்பாடு, மொழிவழியிலானத் தெளிவான சான்றுகள் உள்ளன. ஆனால் இதுவும் தோற்றநிலையில் அமைவதுபோல, வேளாண்மையால் நிகழவில்லை என்பது உறுதி.
பாலினம் சாராத உடலணுக் குறுமவக (பண்பக) மரபன் வேறுபாடு சார்ந்த ஆய்வுகளின் முடிவுகள் குறிப்பிட்ட இருவகை வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இம்முறைப்படி, 2009 இல் நடத்திய பரவலான 500,000 உடலணுக் குறுமவகக் குறிப்பான்களைக் கொண்ட இருமாற்று மரபன்களின் ஆய்வில், இரிச் குழுவினர் இக்கால இந்திய மக்கள்தொகை பின்னை ஓலோசீன் காலகட்டத்தில் இருந்தே மரபியலாக வேறுபட்ட இருபெரும் மூதாதையர்களின் கூட்டிணைவில் தோன்றியதெனும் கருதுகோளை முன்வைக்கின்றனர். இவற்றுக்கு இவர்கள் "தென்னிந்திய மூதாதையர்" எனவும் "வட இந்திய மூதாதையர்" எனவும் பெயரிட்டுள்ளனர்). இரிச்சின் கருத்துப்படி, "வட இந்திய மூதாதையரில் திராவிட மொழிகளைப் பேசுவோரினும் கணிசமாக இந்தோ-ஐரோப்பியர் பரவல் கூடுதலாக அமைந்து உள்ளது. இதனால் தென்னிந்தியர் தம் மொழிகளை வட இந்தியரோடு உறவுகொள்ளும் முன்பே பேசிவந்தமை புலப்படுகிறது."[42]
தெற்காசிய மக்கள்தொகை வரலாற்றியலாக, தென்னிந்திய மூதாதையர், வட இந்திய மூதாதையர் ஆகிய இருபெரும் கால்வழிகளின் கூட்டிணைவால் உருவாகியதெனும் இரிச்சின் ஆய்வை உறுதிபடுத்தும் முகமாக மசூர்சானிக் குழுவினர் 2011இல் தம் ஆய்வுரை ஒன்றில் "1200- 3500 ஆண்டுகளுக்கும் முன்பு இம்மூதாதைய்ர்களின் கூட்டிணைவு ஏற்பட்டுள்ளதாக, அதாவது இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசத் தொடங்கியபோது ஏற்ப்ட்டுள்ளதாகக் கூறுகின்றனர்."[43]
பாசு குழுவினர் 2003 இல் நடத்திய ஆய்வில் "இந்தோ-ஐரோப்பிய மொழிபேசும் நாடோடிகள் வரும் முன்னர் இந்தியா முழுவதிலும் திராவிடப் பழங்குடிகள் தாம் பரவியிருந்தனர் எனும் முடிவுக்கு வந்துள்ளனர்". மேலும், "நிகழ்கால இந்திய மக்கள்தொகையின் மரபியல் கட்டமைப்புகளில் மரபன் பிளவால் உருவாகும் அடிமான, பெயர்வு விளைவுகளால் தோன்றிய உட்பதிவுகள் பொதிந்துள்ளன" எனவும் உறுதிபடுத்துகின்றனர்.[23] மரபியலாளர் மசூம்தார் 2010 இல் அண்மையில் இரிச் குழுவினரின் முடிவுகள் (2009) ஊன்குருத்து மரபன் ஆய்வு முடிவுகளோடும் ஒய் குறுமவக ஆய்வு முடிவுகளோடும் வியக்கத்தக்க வகையில் ஒத்திசைவாக அமைகின்றன என உறுதிபடுத்தியுள்ளார்.[44]
இந்திய மரபன் தொகுதியில் நடுவண் ஆசிய் மக்கள்தொகையின் பெரும்பங்களிப்பு, குறிப்பாக வட இந்திய மரபன் தொகுதியில் அமைந்துள்ளது. இவர்கள் இந்தியாவுக்கு ஆப்கானித்தனம், பாக்கித்தானம் வழியாக புலம்பெயர்ந்து வந்துள்ளனர். ஊன்குருது மரபன் வேறுபாட்டு ஆய்வுத் தரவுகளின்படி, நடுவண் ஆசிய, பாக்கித்தான மக்கள்தொகைகளோடு ஒப்பிடும்போது வட இந்திய மக்கள்தொகையின் மரபியல் வேறுபாட்டுக் கெழு சிறுமமாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்திய மக்கள்தொகையின் மரபியல் வேறுபாட்டுக் கெழு கூடுதலாகவும் வடகிழக்கு இந்திய மக்கள்தொகையின் மரபியல் வேறுபட்டுக் கெழு பெருமமாகவும் உள்ளது.மற்ற இந்தியப் பகுதிகளைவிட, வட இந்திய மக்கள்தொகை மரபியலாக நடுவண் ஆசிய மக்கள்தொகையோடு நெருங்கிய உறவு பூண்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு ஒப்ப, அண்மையில் மேற்கொண்ட பரவலான 500,000 உடலணுக் குறுமவகக் குறிப்பான்களைக் கொண்ட இருமாற்று மரபன்களின் ஆய்வு வடக்கில் இருந்து தெற்காக அமையும் மரபியல் நெருக்கச் சரிவு இந்தியரின் மேற்கு ஐரோப்பாசிய மரபியல் உறவைப் புலப்படுத்துகிறது. இந்த ஐரோப்பாசிய மரபன் தொகுதி நெருக்கம் தென்னிந்தியரை விட வட இந்தியரோடு கூடுதலாக அமைகிறது.
வாட்கின்சுக் குழுவினரும் (2005) கிவிசில்டுக் குழுவினரும் (2003) நடத்திய ஆய்வுகளில் பாலினம் சாராத உடலணு மரபன் ஆய்வில் இந்தியச் சாதிக் குழுக்களும் இனக்குழுக்களும் பொதுமூதாதை வழிவந்துள்ளனவாகக் கண்டுள்ளனர்.[45][46] இரெட்டிக் குழுவினர் 2005 இல் நடத்திய ஆய்வில் மிகவும் சீரான மாற்றுமரபன் நிகழ்வெண் பரவலை ஆந்திரப்பிரதேச்ச் சாதிக் குழுக்களில் அமைதலையும் ஆனால் சாதிக் குழுக்களுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே பேரளவு மரபியல் தொலைவு அமைதலையும் கண்டுள்ளனர்.[47]
விசுவநாதன் குழுவினர் 2004 இல் தென்னிந்தியப் பழங்குடிகளின் மக்கள்தொகையில் மரபியல் கட்டமைப்பையும் நெருக்கங்களையும் பற்றி நடத்திய ஆய்வில், "மரபியல் வேறுபாடு உயர்வாக உள்ளதெனவும் மேலும் மரபியல் தொலைவு புவியியல் தொலைவோடு கணிசமாகப் பொருந்தவில்லை எனவும் எனவே தென்னிந்தியப் பழங்குடிகளின் உருவாக்கத்தில் மரபன் பெயர்வு மரபியல் வேறுபாட்டில் கணிசமான பாத்திரம் வகித்துள்ளது எனவும் முடிவுக்கு வந்துள்ளனர். மற்ரபடி, இந்திய மக்கள்தொகை உறவுகளின் ஆய்வுகள் இவை புறவுருவ வேற்ருமைகலைச் சாராமல் நெருக்கமாக ஒன்றோடொன்று நெருங்கி யுள்ளன எனவும் குறிப்பாக ஆப்பிரிக்கர்களோடு நெருக்கமான சார்பு ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் இந்தியருக்கும் ஆப்பிரிக்கருக்கும் இடையில் அமையும் அணுக்கமான புறவுருவ ஒற்றுமை அவர்களின் மரபியல் உறவு நெருக்கத்தால் ஏற்படவில்லை. ஆனால் அது குவிதலால் தோன்றியிருக்கலாம் என விளக்கப்படுகிறது."[48]
அமெரிக்க மாந்தரின மரபியல் இதழில் 2011 இல் வெளியிடப்பட்ட ஆய்வு[49] இந்திய மூதாதைக் கால்வழிகள் முன்னர்க் கருதியதைப் போலவல்லாமல், மிகவும் சிக்கலான மக்கள்தொகையியல் வரலாற்று விளைவால் உருவாகியவை என்பதைத் தெளிவுபடுத்தியது.ஆய்வாளர்களின் கருத்துப்படி, தெற்காசிய மூதாதையரின் கால்வழிகள் இருபெரும் உறுப்புகளைக் கொண்டுள்ளன. இதில் ஒன்று தெற்காசியா, மேற்காசியா, நடுவண் கிழக்குப் பகுதி, காகாசியா பகுதிகளில் உள்ல மக்கள்தொகைகளில் உயர் நிகழ்வெண்னிலும் மரபியல் பன்மையுடனும் பரவியுள்ளது; மற்றொரு உறுப்பு தெற்காசியப் பகுதியில் மட்டுமே அமைகிறது. என்றாலும், இந்தோ-ஆரிய நகர்தல் வாய்ப்பை தள்ளிவிடுவதை விட, இருவகை இந்திய மூதாதையரின் கால்வழி உறுப்புகளின் மரபியல் சார்பை உற்றுப்பார்க்கும்போது, இவை பன்முக மரபன் பாய்வால் பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்த்தால் ஏற்பாட்ட்தென்பது விளங்கும்.[49]
ஆய்வுகள்வழி கண்டறிந்த ஒருமைப் பண்புக் குழுக்களின் பன்மையை உருவகப்படுத்திப் பார்க்கும்போது இருவகை இந்தியக் கால்வழிகளுமே 3,500 இல் நிகழ்ந்த இந்தோ-ஆரிய முற்றுகைக்கு மிகவும் பழையன; முந்தைய காலத்தின என்பது தெளிவாகிறதுஉலக வட்டாரங்களோடு ஒப்பிடும்போது இணைநிலை மரபியல் தொலைவுகளின் முடிவுகள் கிழக்கு ஐரோப்பாசியர்களை விட மேற்கு ஐரோப்பாசியர்களோடு இந்திய மரபுக் கால்வழிகள் நெருக்கமாக அமைகின்றன.
{{citation}}
: Invalid |ref=harv
(help)
Our hypothesis is supported by archaeological, linguistic and genetic evidences that suggest that there were two prominent waves of immigrations to India. A majority of the Early Caucasoids were proto-Dravidian language speakers that migrated to India putatively ~ 6000 YBP.
{{citation}}
: Invalid |ref=harv
(help)
{{citation}}
: Invalid |ref=harv
(help)
{{citation}}
: Invalid |ref=harv
(help)
{{citation}}
: Invalid |ref=harv
(help){{citation}}
: Unknown parameter |doi_brokendate=
ignored (help){{citation}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)CS1 maint: location missing publisher (link) (paper read at the South Asia Conference){{citation}}
: CS1 maint: unflagged free DOI (link){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help) (PhD){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)