தெலுக் இந்தான் (P076) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Teluk Intan (P076) Federal Constituency in Perak | |
![]() | |
மாவட்டம் | ஈலிர் பேராக் மாவட்டம் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,222 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தெலுக் இந்தான் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாகன் டத்தோ, தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாசீர் சாலாக், சங்காட் ஜோங், பாசீர் பெடாமார், கம்போங் காஜா, சுங்கை மானிக் |
பரப்பளவு | 774 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | நிகா கோர் மிங் (Nga Kor Ming) |
மக்கள் தொகை | 103,065 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Teluk Intan; ஆங்கிலம்: Teluk Intan Federal Constituency; சீனம்: 安顺国会议席) என்பது மலேசியா, பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் (Hilir Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P076) ஆகும்.[7]
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தெலுக் இந்தான் நகரம், பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். ஈலிர் பேராக் மாவட்டத்தின் பெரிய நகரம்; மற்றும் மாவட்டத்தின்தலைப் பட்டணமும் ஆகும்.[8]
2020-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இதன் மக்கள் தொகை 103,065. தெலுக் மாக் இந்தான் எனும் ஒரு பெண்மணியின் பெயரில் இருந்து தெலுக் இந்தான் நகரத்திற்குப் பெயர் வந்தது.[9]
1882-ஆம் ஆண்டு, நீரிணை குடியேற்றங்களின் பிரித்தானிய ஆளுநராக இருந்த சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் ஆர்பர்ட் ஆன்சன் (Sir Archibald Edward Harbord Anson) என்பவர் தெலுக் இந்தான் நகரத்திற்கு பதிய நகர வடிவத்தை வரைந்து கொடுத்தார். தெலுக் இந்தான் நகரம் புதிய தோற்றம் பெற்றது. அதன் பின்னர் அவருடைய நினைவாக அந்த நகரத்திற்கு தெலுக்கான்சன் என்று பெயர் வைக்கப் பட்டது.
1982-ஆம் ஆண்டு இந்த நகரத்தின் நூறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. அப்போது பேராக் சுல்தான், தெலுக்கான்சன் எனும் பெயரை தெலுக் இந்தான் என்று மாற்றம் செய்தார்.
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் தெலுக்கான்சன் தொகுதியில் இருந்து தெலுக் இந்தான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
தெலுக் இந்தான் | ||||
7-ஆவது மக்களவை | P070 | 1986–1990 | ஓங் தின் கிம் (Ong Tin Kim) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P073 | 1995–1997 | ||
1997–1999 | எம். குலசேகரன் (Kulasegaran) |
காகாசான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | மா சியூ கியோங் (Mah Siew Keong) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) | |
11-ஆவது மக்களவை | P076 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | மனோகரன் மாரிமுத்து (Manogaran Marimuthu) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2014 | சியா லியோங் பெங் (Seah Leong Peng) | ||
2014–2018 | மா சியூ கியோங் (Mah Siew Keong) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) | ||
தெலுக் இந்தான் | ||||
14-ஆவது மக்களவை | P076 | 2018–2022 | நிகா கோர் மிங் (Nga Kor Ming) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
87,222 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
65,128 | 73.60% | ▼ - 7.52% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
64,194 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
218 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
716 | ||
பெரும்பான்மை (Majority) |
15,169 | 23.63% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [10] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
நிகா கோர் மிங் (Nga Kor Ming) |
பாக்காத்தான் | 64,194 | 33,133 | 51.61% | - 2.76% ▼ | |
சைனல் பாட்சி பகாருடின் (Zainol Fadzi Paharudin) |
பெரிக்காத்தான் | - | 17,964 | 27.98% | + 27.98% ![]() | |
முருகையா தோப்புசாமி (Murugiah Thopasamy) |
பாரிசான் | - | 12,304 | 19.17% | - 14.36 % ▼ | |
அகமட் குசாயிரி தனுசி (Ahmad Khusyairi Tanusi) |
தாயக இயக்கம் | - | 793 | 1.24% | + 1.24% ![]() |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)