தெலுத்தா கொரோனா வைரசு | |
---|---|
![]() | |
தெலுத்தா கொரோனாவைரசு முதிர்ந்த நச்சுயிரிகளின் மின்துகள் நுண்படம். | |
தீநுண்ம வகைப்பாடு ![]() | |
துணை மரபு மற்றும் பேரினம் | |
|
தெலுத்தா கொரோனா வைரசு என்பது கொரோனா வைரசின் மரபு திரிபு கொண்ட நான்கு வகைகளில் ஒன்று. இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத் தனிமைப்படுத்தப்பட்ட இரைபோ கருவமிலம் மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். தெலுத்தா கொரோனா வைரசு பொதுவாக பறவைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு நோய் தொற்றை ஏற்ப்படுத்தும்.
இது பாலூட்டிகளுக்கு மற்றும் பறவைகளுக்கு தொற்றை ஏற்படுத்தும் ஏழாவது கொரோனா வைரசான நோவல் கொரோனா வைரசின் நான்கு வகை மரபு திரிபு வைரசுகளில் ஒன்று ஆகும். தெலுத்தா கொரோனா வைரசு பறவைகள் மற்றும் பன்றிகளின் உடலில் பொது கொரோனா வைரசு நோய் தொற்றால் ஏற்படும் மரபு திரிபால் உண்டானது ஆகும். [1]
தெலுத்தா கொரோனா வைரஸ்களில் மரபணு மறுசீரமைப்பு பொதுவாக ஏற்படுகிறது.[2] இந்த மரபணு மாற்றம் தொற்றுக்கு உட்படும் உயிரினத்தின் உடலில் உள்ள உயிர் எதிர் பொருளுடன் ஒட்டும் வகையில் பலவிதமாக அடிக்கடி மாற்றி அமைத்துக்கொள்கிறது.[2]