பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெலூரியம்(II) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
[1] 13451-17-7[1] | |
InChI
| |
பண்புகள் | |
TeO | |
வாய்ப்பாட்டு எடை | 143.60 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கந்தக மோனாக்சைடு பொலோனியம் ஓராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெலூரியம் ஓராக்சைடு (Tellurium monoxide) என்பது TeO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஈரணு மூலக்கூறான இச்சேர்மம் கணத்தில் தோன்றி மறைகின்ற சேர்மமாகும் [2]. தெலூரியம் மோனாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. தெலூரியம் ஓராக்சைடின் இருப்பு தொடர்பான முந்தைய ஆய்வுகள் கணிசமானதாக இல்லை [3]. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகளின் மீது மேற்பூச்சாகப் பூசப்படும் தெலூரியம் கீழாக்சைடும் தெலூரியம் ஈராக்சைடும் தெலூரியமும் சேர்ந்த கலவையாகும் [4].
1883 ஆம் ஆண்டில் இ. டைவர்சும் எம்.சிமோசும் தெலுரியம் மோனாக்சைடைக் கண்டுபிடித்தனர் [5]. வெற்றிடத்தில் தெலூரியம் சல்பாக்சைடை வெப்பச் சிதைவுக்கு ஆட்படுத்துவதால் இது உருவாக்க்ப்பட்டதாகக் கூறப்படுகிறது[6]. ஐதரசன் குளோரைடுடன் இது வினைபுரிவதாகவும் 1913 ஆம் ஆண்டில் கூறப்பட்டது [7]. இது தூய்மையான ஒரு திண்மம் என்று கூறப்படுவதற்கான பிந்தைய ஆய்வுகளும் கணிசமானதாக இல்லை[2].1984 ஆம் ஆண்டு பானாசோனிக் நிறுவனம் தயாரித்த அழித்துப் பயன்படுத்தக்கூடிய ஒளியியல் தட்டு இயக்கியில் தெலூரியம் ஓராக்சைடு பயன்படுத்தப்படுவதாகவும் அறியப்பட்டது. ஆனால் இது தெலுரியம் மற்றும் தெலூரியம் ஈராக்சைடும் கலந்த கலவையாகும்[8].