தெலூரியம் நைத்திரைடு (Tellurium nitride ) என்பது Te4N4, என்ற மூலக்கூறுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தெலூரியம் சேர்மமாகும். தெலூரியம் நேர்மின் அயனியும் N3−என்ற எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இருமை நைத்திரைடுகளை நோக்கிய முயற்சிகள் முடிவில்லாதவையாகவே அறியப்பட்டு அத்தகைய பொருட்கள் நிலையற்றவையாக இருக்கின்றன. தெலூரியம் நைத்திரைடும் இத்தகையதேயாகும். செலீனியம் நைத்திரைடு, டெட்ராகந்தக டெட்ராநைத்திரைடு போன்ற சேர்மங்களின் ஒப்புமை சேர்மமாக தெலூரியம் நைத்திரைடு கருதப்படுகிறது. அமோனியா தெலூரியம் டெட்ராகுளோரைடுடன் வினைபுரிவதால் தெலூரியம் நைத்திரைடு உருவாகும் வினை கந்தக நைத்திரைடு தயாரிக்கும் வினையை ஒத்திருக்கிறது. [1][2] தெல்லூரியம் டெட்ராகுளோரைடு உலோக சிலிலமைடு ஈந்தணைவியின் டெட்ரா ஐதரோபியூரான் கரைசலுடன் வினைபுரிகையில் நன்கு வரையறுக்கப்பட்ட தெலூரியம் நைத்திரைடு [Te6N8(TeCl2)4(THF)4] அணைவுச் சேர்மமாக உருவாகிறது. [3]