தேசபந்து (Deshabandu) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்ய /(தேசகீர்த்தி[தொடர்பிழந்த இணைப்பு]), தேசமான்ய என்பவற்றுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் தேசபந்து என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். (எ.கா: தேசபந்து சிவா சின்னத்தம்பி).
தேசபந்து என்ற சமசுகிருத சொல்லிற்கு நாட்டின் நண்பன் என்று பொருள். பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்திற்காக போராடிய தலைவர்களை பொதுமக்கள் தேசபந்து என்ற அடைமொழியுடன் அழைப்பர். எடுத்துக்காட்டு: சித்தரஞ்சன் தாஸ்[2]
இலங்கையில் 1986ல் இருந்து விருது பெற்றவர்களின் விபரங்களைக் கீழே காணலாம்.
- அகங்கமகே டியூடர் ஆரியரத்ன
- ஹேவா கொமனகே தர்மதாச
- நொரேந்திரதாஸ் ஜயரத்தினம் வாலுப்பிள்ளை
- டாப்னே ஆட்டிகல
- விமலா டி சில்வா
- அருளானந்தம் யேசுஅடியான் சாமுவேல் ஞானம்
- டேவிட் எட்வின் ஹெட்டியாராச்சி
- தமித்தல் சேனகுமார் ஜயசுந்தர
- கிளாரா மோத்வானி
- புலத்சிங்கலகே சிரிசேன கூரே
- ஜேம்ஸ் ஏர்னெஸ்ட் இவான் கொரியா
- அல்பேர்ட் எதிரிசிங்க
- டொன் ஜினதாச ஆட்டிகல
- சிவா சின்னத்தம்பி
- லேனா சார்லட் பெர்னாண்டோ
- மொகமத் தாசிம் அகமத் புர்க்கான்
- சத்திஸ்சந்திர ஜயசிங்க
- அபேசிரி மென்டிஸ் முனசிங்க
- அப்துல் ஹலீம் செரீஃப்தீன்
- பிரான்சிஸ்கூஹெட்டிகே ஜெரால்ட் ஹட்சன் சில்வா
- சாமுவேல் ஜெயராஜா ஸ்டீபன்
- விக்டர் கார்வின் வீரவர்தன ரத்நாயக்க
- மைக்கேல் திசேரா
- விக்கிரமசிங்க விமலதாச
- வேலு அண்ணாமலை
- மொகமத் மொகிதீன் மொகமத் அப்துல்காதர்
- நுவரபக்ச ஹேவாயலகே கீர்த்திரத்ன
- செம்புக்குட்டியாராச்சிகே பேர்ட்ரம் சில்வா
- மாணிக்கம் சிவானந்தன்
- ஜோன் வில்லியம் சுபசிங்க
- நொயெல் விமலசேன
- சுவர்ணா பெர்டினன்ட்
- அலெக் ரொபேர்ட்சன்
- மிரிஸ்செ ஹேவகே குணதாச சிரிவர்தன
- ஜூலியன் பொல்லிங்
- கொஸ்கமகே திலக தம்மிக்க ஜினதாச
- பாலித எட்வேர்ட் டயஸ் விஜேசிரி ஜயவர்தன கருணாரத்ன வீரமன்
- போகொட அப்புகாமிலாகே பிரேமரத்ன
- கலிஸ்டஸ் ரெஜினோல்ட் சீமன்
- சீதா செனவிரத்ன
- டொன் பியதாச ஜயசிங்க
- கார்டி புஞ்சி ஹேவகே கருணாரத்ன
- ஜெசிமா இஸ்மாயில்
- ஜோய்ஸ் செலினா அபேவர்தன குணசேகர
- எடித் மார்குவெரைட் கிரேஸ் பெர்னாண்டோ