தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம் (National Botanical Research Institute), லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு ஆய்வுக் கழகமாகும். வகைபிரித்தல் மற்றும் நவீன உயிரியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கிறது[1].
முதலில், பேராசிரியர் கலைஸ் நாத் கௌல் உத்தரப் பிரதேசம் அரசின் சார்பாக தேசிய தாவரப் பூங்கா (National Botanical Garden) என்ற பெயரில் இக்கழகத்தினைத் தொடங்கினார். பின்னர் 1953ல் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1978ல் தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
தொடக்கத்தில் அடிப்படை தாவரவியல் பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, தேசிய நலனுக்கு முன்னுரிமை தந்து செயல்முறை சார்ந்த மற்றும் வளர்ச்சி நோக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இக்கழகத்தின் ஆராய்ச்சியின் பலனாக லாஸ் பனோஸ் வரிகட்டா-ஜெயந்தி(Los Banos Variegata-Jayanthi) என்ற புதிய வகை காகிதப்பூ இனம் உருவாக்கப்பட்டது.[2]