தேசிய நெடுஞ்சாலை 127B | ||||
---|---|---|---|---|
![]() வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 127ஆ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 401 km (249 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சிறீராம்பூர், அசாம் | |||
தெற்கு முடிவு: | நோங்சுடாய்ன், மேகாலயா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேகாலயா, அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 127ஆ (National Highway 127B (India)), பொதுவாக தே. நெ. 127ஆ என்று அழைக்கப்படுவது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமில் சிறீராம்பூரை மேகாலயாவில் உள்ள நோங்ஸ்டனுடன் இணைக்கிறது.[1][2]
சிறீராம்பூர் – துபுரி - புல்பாரி - துரா - ரோங்கிராம் - ரோன்ஜெங் - நோங்சுடாய்ன்[2]
தேசிய நெடுஞ்சாலை 127ஆ-வின் முக்கிய பகுதி, 300 கி.மீ. க்கு மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை மேற்கு கரோ, தென் மேற்கு கரோ, கிழக்கு கரோ, மேகாலயாவின் மேற்கு காசி மலைகள் ஆகிய நான்கு மாவட்டங்கள் வழியாக செல்கிறது. மேகாலயாவில் சாலையின் சீரமைப்பு ஆரம்பத்தில் உருளும் நிலப்பரப்பிலிருந்து தொடங்குகிறது. பின்னர் பெரும்பகுதி முக்கியமாக மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக செல்கிறது. மேலும் இச்சாலை ஏராளமான ஆறுகளையும் ஓடைகளையும் கடந்து பயணிக்கின்றது.[4]