தேசிய நெடுஞ்சாலை 150அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 50 | ||||
நீளம்: | 618 km (384 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜெவர்கி, கர்நாடகா | |||
| ||||
தெற்கு முடிவு: | சாமராசநகர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம் and ஆந்திரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 150அ (தே. நெ. 150அ)(National Highway 150A (India)) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[2][1] இது தேசிய நெடுஞ்சாலை 50-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 150அ இந்தியாவில் கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[4]
தேசிய நெடுஞ்சாலை 150அ-வின் வடக்கு முனையமானது ஜேவர்கிக்கு அருகிலுள்ள தே. நெ. 50 உடன் சந்திக்கின்றது. இந்நெடுஞ்சாலை கிழக்கு கருநாடகம் வழியாக தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதன் பின்னர் குறுகிய தூரம் ஆந்திராவிற்குள் நுழைந்து, பின் தெற்கு கருநாடகாவில் செல்கிறது. இதன் தெற்கு முனையம் சாமராஜநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 948 உடன் சந்திக்கின்றது.[1]