தேசிய நெடுஞ்சாலை 205 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 5 | ||||
நீளம்: | 183 km (114 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கரார் | |||
வடக்கு முடிவு: | சிம்லா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | ரூப்நகர், கிராட்பூர் சாகிப், சுந்தர்நகர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 205 (National Highway 205) என்பது என்.எச்205 எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலையாகும்.[1] இந்த நெடுஞ்சாலையானது இந்திய மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்கிறது.
இந்த நெடுஞ்சாலையானது சண்டிகருக்கு அருகில் உள்ள கராரில் தொடங்குகிறது. இந்த நெடுஞ்சாலை ரூப்நகர், பஞ்சாபில் உள்ள கிராட்பூர் சாகிப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இசுவார்கத், நாம்ஹோல், டார்லகாட் ஆகியவற்றின் வழியாகச் சென்றுசிம்லாவிற்குஅருகில் முடிகிறது.
2010 ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் எண்கள் மாற்றப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை 21 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 88 ஆகியவற்றின் பகுதிகள் இணைக்கப்பட்டு பழைய தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு பகுதி இணைக்கப்பட்டு புதிய தேசிய நெடுஞ்சாலை 205 உருவாக்கப்பட்டது.