தேசிய நெடுஞ்சாலை 217 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 17 | ||||
நீளம்: | 352.3 km (218.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பைகான், அசாம் | |||
கிழக்கு முடிவு: | துத்னோய், அசாம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம், மேகாலயா | |||
முதன்மை இலக்குகள்: | தாளு, மேகாலயா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 217 (National Highway 217 (India)) பொதுவாக தெ. நெ. 217 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 51, 62-இன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-217 இந்தியாவின் அசாம், மேகாலயா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
தே. நெ. 217 இந்தியாவின் அசாம், மேகாலயா மாநிலங்களில் உள்ள பைகான், துரா, தாலு, பாக்மாரா, ரோங்ஜெங், டாம்ரா, துத்னோய் நகரங்களை இணைக்கிறது.[3]
2021ஆம் ஆண்டில், சைர்டோடாக்டிலசு கார்சுடிகோலசு என்ற புதிய பல்லிச் சிற்றினம் இந்த நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.[4]