தேசிய நெடுஞ்சாலை 26 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 26 நிலப்படம் சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 551 km (342 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பர்கஃட், ஒடிசா | |||
முடிவு: | நட்டவல்சா சாலை, விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்), ஆந்திரப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சத்தீசுகர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | பர்கஃட் - பலாங்கீர் - விஜயநகரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 26 (முன்னர் தேசிய நெடுஞ்சாலை 43)(National Highway 26 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது ஒடிசா மாநிலத்தின் பர்கர் நகரை இணைக்கிறது. இது ஒடிசா வழியாக ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள இராஜபுலோவா வரை செல்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 6ஐ இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 26 கிழக்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்கிறது.[1][2]
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 90.33 கி.மீ. ஆகும்.[2]
வடக்கு முனையமான போரிகும்மா, தேசிய நெடுஞ்சாலை 26 முதல் பர்கர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 63 வரை ஜெகதல்பூர் நோக்கிச் செல்லும் 2 நெடுஞ்சாலைகளின் சந்திப்பாகும். தெற்கு முனையில், இராஜபுலோவா, கொல்கத்தா சென்னை இடையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 16இல் உள்ளது.