தேசிய நெடுஞ்சாலை 336 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 52 km (32 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புதுக்கோட்டை | |||
முடிவு: | திருச்சிராப்பள்ளி | |||
அமைவிடம் | ||||
முதன்மை இலக்குகள்: | கீரனூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 336 (National Highway 336-India) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது 52 கி. மீ. தூரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இச்சாலை முற்றிலும் தமிழ்நாட்டில் மட்டுமே செல்கிறது. இது பழைய தேசிய நெடுஞ்சாலை 210ன் ஒரு பகுதியாகும். புதுக்கோட்டையின் புறநகர்ப் பகுதியில் உள்ள சந்திப்பில் உள்ள தே. நெ. 36லிருந்து திருச்சி வரை சாலை செல்கிறது. இச்சாலையில் கீரனூர் முக்கிய நகரமாக உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற பல முக்கிய இடங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.