கம்போடியாவின் தேசிய நெடுஞ்சாலை 3 (National Highway 3) என்பது 202 கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கும் ஒரு சாலையாகும். இது தேசிய சாலை 3 (10003 என்றும் அழைக்கப்படுகிறது. இச்சாலை தலைநகரம் புனோம் பென்னை வியல் ரென் நகருடன் இணைக்கிறது[1]. மேலும் இச்சாலை 2008 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் புதுப்பிக்கப்பட்டு சீனாவின் குன்மிங்கில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காக் வரையிலான சர்வதேச "வடக்கு-தெற்கு பொருளாதாரத் தாழ்வாரம்" எனப்படும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு அங்கமாக உருவானது.[2]