தேசிய நெடுஞ்சாலை 40 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை நிலப்படம் (சிவப்பு வண்ணத்தில்) | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 408 km (254 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கர்னூல் | |||
தெற்கு முடிவு: | இராணிப்பேட்டை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப்பிரதேசம்: 381 km (237 mi) தமிழ்நாடு: 27 km (17 mi) | |||
முதன்மை இலக்குகள்: | நந்தியால் - கடப்பா -பில்லேறு -சித்தூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 40 (National Highway 40 (India)), என்பது முன்னர் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த 4 மற்றும் 18 ஆகியவற்றின் பகுதிகளின் இணைவுச் சாலையாகும். இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை கர்னூலில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்கிக் கடப்பா மற்றும் சித்தூர் வழியாகத் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் முடிவடைகிறது.[1][2] இது ராயலசீமா விரைவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூலுக்கும் கடப்பாவுக்கும் இடையே இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இது கர்னூலில் தொடங்கி நந்தியால், அல்லகத்தா, மைடுகூர், கடப்பா, ராயச்சோட்டி, பைலேரு, சித்தூர் வழியாகச் சென்று ராணிப்பேட்டையில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 381 கி. மீ. ஆகும். இதில் 236.74 கி. மீ. தூரம் ஆந்திராவிலும் மற்றும் 27.00 km (16.78 mi) தமிழ்நாட்டிலும் செல்கிறது.[2][3]
கர்னூல் ↔ நந்தியால் ↔ அல்லகத்தா ↔ மைடுகூர் ↔ கடப்பா ↔ ராயச்சோடி ↔ பிலேரு ↔ சித்தூர் ↔ ராணிப்பேட்டை