தேசிய நெடுஞ்சாலை 512 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 96 km (60 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கசோல், மால்டா மாவட்டம் | |||
தொளலாத்பூர், புனியாத்பூர், கங்கராம்பூர், பாலூர்காட் | ||||
கிழக்கு முடிவு: | கிலி, தெற்கு தினஜ்பூர் மாவட்டம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 512 (National Highway 512 (India))(தே. நெ. 512) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இதனை நான்கு வழிச் சாலையாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.[1] இது காசோலிலிருந்து வங்களாதேசத்தின் கிலி எல்லை வரை செல்கிறது. எல்லையின் மறுபுறம், இந்தச் சாலை கிலி-பீராம்பூர் நெடுஞ்சாலையாகத் தொடர்கிறது.
காசோல்-கிலி பகுதி கூகிள் வரைபடங்கள், பிற இடங்களில் மாநில நெடுஞ்சாலை 10 (மேற்கு வங்காளம்) தே. நெ. 512-ன் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு, மத்திய அரசின் அனுமதியுடன், ஆறு முக்கிய நெடுஞ்சாலைகளைப் பழுது பார்த்து பராமரித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவை இறுதியில் தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்படும். இதில் காசோல்-கிலி விரிவாக்கமும் அடங்கும்.
கஜோல்-தௌலத்பூர்-பன்சிஅரி-கங்காராம்பூர்-அர்சுரா-பலூர்காட்-கில்லி (இந்திய/வங்காளதேச எல்லைக்கு அருகில்).[1][2]