தேசிய நெடுஞ்சாலை 52 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 52 சிவப்பு நிறத்தில் இந்திய வரைபடத்தில் | ||||
Schematic map of National Highways in India | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 2,317 km (1,440 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சங்குரூர், பஞ்சாப் பகுதி | |||
முடிவு: | அன்கோலா, கருநாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் பகுதி - அரியானா - இராசத்தான் - மத்தியப் பிரதேசம் - மகாராட்டிரம் - கருநாடகம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 52 (தே. நெ. 52)(National Highway 52 - India) என்பது இந்தியாவின் நான்காவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது பஞ்சாப்பின் சங்க்ரூரை கர்நாடகவின் அங்கோலாவுடன் இணைக்கிறது. இந்தியாவில் தற்போதுள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்த பின்னர் தேசிய நெடுஞ்சாலை 52 எண் பெற்றது. பழைய நெடுஞ்சாலை தே. நெ.-63 கருநாடக மாநிலத்தில் உள்ள அங்கோலாவினை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டியுடன் இணைக்கின்றது.[2] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 52 அங்கோலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 (பழைய எண் என். எச்.-17) சந்திப்பில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் அரேபைல் மலைப் பாதை வரை சென்று பின்னர் எல்லபுரா வழியாக ஹூப்ளி நகரத்திற்குச் செல்கிறது.[3] விஜயபுராவிலிருந்து (பழைய பெயர் பீஜப்பூர்) சோலாப்பூர் வரையிலான பழைய தேசிய நெடுஞ்சாலை 13இன் சில பகுதிகள் தேசிய நெடுஞ்சாலை-52 உடன் இணைக்கப்பட்டன. ஹூப்ளி நகரத்திலிருந்து கார்வார் கடல் துறைமுகம் மற்றும் புதிய மங்களூர் கடல் துறைமுகம் வரை வரும் சுமையுந்து இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்துகின்றன. அங்கோலாவிலிருந்து எல்லபுரா வரையிலான சாலை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் பியோரா-துலே பிரிவு புகழ்பெற்ற ஆக்ரா-பம்பாய் சாலையின் ஒரு பகுதியாகும். இது ஏபி சாலை என்றும் அழைக்கப்படுகிறது.