தேசிய நெடுஞ்சாலை 53 | ||||
---|---|---|---|---|
தே. நெ. 53 சத்தீசுகரில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
AH46 இன் பகுதி | ||||
நீளம்: | 1,849 km (1,149 mi) பாரத்மாலா: 1,300 km (810 mi) (Dhule - Barkote) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | அசிரா | |||
கிழக்கு முடிவு: | பாராதீப் துறைமுகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து, மகாராட்டிரம், சத்தீசுகர், ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 53, (National Highway 53 (India)-பழைய எண் தே. நெ. 6 சூரத்-கொல்கத்தா, தே. நெ. 200 பிலாசுபூர்-சண்டிகோல் & தே. நெ. 5அ சண்டிகோல்-பாரதீப் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]
தே. நெ. 53, குசராத்தில் உள்ள ஹாஜிரா மற்றும் ஒடிசாவில் உள்ள பரதீப் துறைமுகத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் குசராத்து, மகாராட்டிரா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
இந்தச் சாலை இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலை 46 வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது கொல்கத்தாவிலிருந்து சூரத் வரை 1975 கி.மீ. (1227 மைல்) தூரத்திற்கு மேல் ஓடுவதாக அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சூரத்-கொல்கத்தா நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[3]
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் (கி. மீ.) நீளமுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையை 105 மணி 33 நிமிடங்களில் வடிவமைத்தற்காகக் கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சாலை தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு பகுதியாகும்.
முதன்மை தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் நான்கு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2]
ஹஜீரா, சூரத், வியாரா, சோங்கத், உச்சால்-மகாராட்டிரா எல்லை.
குசராத்து எல்லை நவாபூர் நந்துபார் துலே, ஜல்கான் பூசாவல், மல்காப்பூர், காம்கான், அகோலா, முர்திசாபூர், அமராவதி, கரஞ்சா (வர்தா பண்டாரா, திரோரா, கோந்தியா, தியோரி)
மகாராட்டிரா எல்லை-ராஜ்நந்த்கான், துர்க், பிலாய், ராய்ப்பூர், ஆரங், கோராரி, பித்தோரா, சராய்பாலி-ஒடிசா எல்லை.
சத்தீசுகர் எல்லை-பர்கட், சம்பல்பூர், திலீபானி, தியோகர், பார்கோட், பல்லஹாரா, சமல் தடுப்பணை, கோடிபங்கா, தால்செர், காமாக்யாநகர், புவன், சுகிந்தா, துப்ரி, சண்டிகோல், அரிதாசுபூர், சிலிபூர், பூட்டமண்டாய், பாரதீப் துறைமுகம்.
மகாராட்டிராவின் துலேவிலிருந்து ஒடிசாவின் பல்லகாரா வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 53 ஆசிய நெடுஞ்சாலை 46 இன் ஒரு பகுதியாகும்.[4]