தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் (National Highways Development Project) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 1998 ல் அடல் பிகாரி வாச்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மொத்த சாலை தூரங்களில் 2 % மட்டுமே ஆனால் இந்தியாவின் மொத்த போக்குவரத்தில் 40 % இந்த சாலைகள் மூலமாகவே நடைபெறுகிறது.[1][2][3]
இந்த திட்டத்தின் நோக்கம் இந்திய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, தரமுயர்த்துவது, அகலமாக்குவது போன்றவையாகும்.இத்திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை (NHAI) கொண்டு சாலை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- கட்டம் I: திசம்பர் 2000இல் ₹300 பில்லியன் செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்பளிப்பு.
- கட்டம் II: திசம்பர் 2003இல் ₹343 பில்லியன் திட்டச்செலவில் கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு-வடக்கு பெருந்தடவழிகளின் மீதப் பகுதிகளுக்கும் மேலும் 486 கிமீ (302 மை) நெடுஞ்சாலைகளுக்கும் ஏற்பளிப்பு.
- கட்டம் IIIA: மார்ச்சு 2005இல் ₹222 பில்லியன் திட்டச்செலவில் 4,035 கிமீ (2 மை) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் IIIB: ஏப்ரல் 2006இல், ₹543 பில்லியன் திட்டச்செலவில் 8,074 கிமீ (5 மை) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் V: அக்டோபர் 2006இல், 5,700 கிமீ (3 மை) நீளம் தங்க நாற்கரச் சாலைகள் உட்பட, 6,500 கிமீ (4 மை), தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு. இது முற்றிலும் DBFO முறைமையில்.
- கட்டம் VI: நவம்பர் 2006இல் ₹167 பில்லியன் திட்டச்செலவில் 1,000 கிமீ (620 மை) தொலைவு விரைவுச்சாலைகளை உருவாக்கிட ஏற்பளிப்பு
- கட்டம் VII: திசம்பர் 2007இல், ₹167 பில்லியன் திட்டச்செலவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேர்ந்தெடுத்த தேசியச்சாலைகளில் வட்டச்சாலைகள், புறவழிச்சாலைக்ள, மேற்பாலங்கள் கட்டமைக்க ஏற்பளிப்பு