நிறுவப்பட்டது | 1999 |
---|---|
ஆய்வு வகை | பொது |
நிதிநிலை | ₹500 கோடி (US$63 மில்லியன்) |
ஆய்வுப் பகுதி | நோய்ப்பரவலியல் பொது உடல்நலவியல் |
பணிப்பாளர் | மருத்துவர் மனோஜ் வி முர்கேகர் |
அமைவிடம் | சென்னை, இந்தியா |
Campus | நகர்ப்புறம், அயப்பாக்கம் |
Affiliations | சென்னைப் பல்கலைக்கழகம் |
Operating agency | இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை |
இணையதளம் | nie.gov.in |
தேசிய நோய்தொற்றியல் நிறுவனம் (National Institute of Epidemiology) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகும். தேசிய நோய்தொற்றியல் நிறுவனம் பன்னாட்டு ஆய்வுகள், நோய் மாதிரியாக்கம் மற்றும் சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை நடத்துகிறது. நோய்தொற்றியல் ஆய்வுகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பரிசோதனைகளையும் மேற்கொள்கிறது.[1]
தேசிய நோய்தொற்றியல் நிறுவனம் சிறீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (தொற்றுநோயியல் மற்றும் சுகாதார அமைப்புகள்) திட்டத்தை நடத்தி வருகிறது.[2] இந்த நிறுவனம் முனைவர் பட்ட ஆய்விற்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் மற்றும் உயிர் புள்ளியியல் துறைகளில் பட்டங்களை இங்கு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பெறுகின்றனர்.[3]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)