உருவாக்கம் | 1977 |
---|---|
வகை | 501(c) |
நோக்கம் | கல்வியுதவி |
தலைமையகம் | |
சேவை பகுதி | வட அமெரிக்கா |
உறுப்பினர்கள் | 2,350[1] |
முக்கிய நபர்கள் | கர்சோன்யா விஸ் வைட்ஹெட் (தலைவர்), ஆரில்லா ரோட்டிரமெல் (துணைத்தலைவர்), ஹெய்தி ஆர். லூயிஸ் (செயலாளர்), ஏஞ்சலா கிளார்க்-டைய்லர், (பொருளாளர்). |
வலைத்தளம் | www |
https://www.nwsa.org/page/People |
தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்கம் (National Women's Studies Association) (சுருக்கமாக:NWSA), பெண்கள் மேம்பாடு தொடர்பாக பெண்ணியம் மற்றும் பாலின ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்க நாட்டில் 1977ம் ஆண்டில் பெண்கள் ஆய்வுத் துறையில் அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் நிறுவப்பட்ட சங்கம் ஆகும்.[2] இது வட அமெரிக்காவில் மட்டும் செயல்படுகிறது.
திறந்த உரையாடல் மற்றும் தகவல்தொடர்பு மூலம் உலகம் முழுவதும் பெண் கல்வியை மேலும் மேம்படுத்துவதே இச்சங்கத்தின் நோக்கம்.[3] தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்கம் தொடங்கியதிலிருந்தே, ஓரங்கட்டப்பட்ட பெண்களை தனது ஆய்வில் சேர்க்கத் தவறியதன் அடிப்படையில் சர்ச்சைக்கு ஆளாகியது.[4] தேசிய பெண்கள் ஆய்வுகள், சங்கம் தனிநபர் மற்றும் நிறுவனம் என இரண்டு வகையான உறுப்பினர்களை கொண்டுள்ளது.[5] இவை இரண்டும் பல்வேறு பயன்பாடுகளை வழங்குகிறது. இது வருடாந்திர மாநாடுகளை நடத்துவதோடு, தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்கத்தின் தொகுதி குழுக்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. மேலும் இச்சங்கம் புத்தகப் பரிசுகள், பெண்கள் மையக் குழு விருதுகள் மற்றும் மாணவர் விருதுகள் மற்றும் பரிசுகள் உட்பட பல்வேறு விருதுகளை வழங்குகிறது.[6]
1973ம் ஆண்டில், பெண்கள் ஆய்வு முன்னோடியான கேத்தரின் ஆர். ஸ்டிம்ப்சன் என்பவர் ஒரு தேசிய பெண்கள் ஆய்வு அமைப்பை நிறுவுவதற்கு அழைப்பு விடுத்தார்.[7] அடுத்த மூன்றாண்டுகளில் பெண்களுக்கான ஆய்வுகள் தொடர்பான விவாதங்கள் நடந்தன. 1976 ஆம் ஆண்டில், கலிபோர்னியா மாநிலத்தில் செயல்படும் சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிபில் வீர் என்பவர், ஒரு தேசிய அமைப்புக்கான திட்டங்களை உருவாக்குவதில் ஆர்வமுள்ளவர்களுக்காக ஒரு அதிகாரப்பூர்வ கூட்டத்தை அழைத்தார்.[3]
ஃபோர்டு அறக்கட்டளை வழங்கிய நிதி நல்கையைக் கொண்டு முதல் தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்க மாநாடு, சனவரி 1977ல் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் சான் ஜோஸ் பல்கலைக்கழகம் மற்றும் சாண்டா கிளாரா மாவட்ட ஆணையம் இணைந்து பெண்களின் நிலையைப் பற்றி விவாதங்கள் நடத்தியது.[10] மூன்று நாள் மாநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய பார்பரா டபிள்யூ. கெர்பரின் கூற்றுப்படி, இச்சங்கம் பிராந்திய குழுக்களின் துணைக்குழுவுடன், அனைத்து பெண்களையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டது, மேலும் ஒருங்கிணைப்பு குழு எனப்படும் ஒரு தலைமைக் குழுவிற்கு உடன்பட்டது.[3]
உலகெங்கிலும் உள்ள பெண்களின் சமூக, அரசியல் மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தேசிய பெண்கள் ஆய்வுகள் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நேர்மறையான சமூக மாற்றத்திற்காக பெண்களிடையே திறந்த உரையாடல் மற்றும் தகவல்தொடர்புகளை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்கள் விடுதலை இயக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது பாலியல், இனவெறி, ஓரினச்சேர்க்கை, யூத எதிர்ப்பு மற்றும் அனைத்து அடக்குமுறை சித்தாந்தங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்தும் விடுதலையை ஊக்குவிக்கிறது. பெண்கள் சமூகத்தில் நுழைவதற்கும், முறையான ஒடுக்குமுறை இல்லாத ஒன்றாக உலகை மாற்றுவதற்கும் பெண்களைச் சித்தப்படுத்துவதே இதன் குறிக்கோள்கள்.[8]
கம்பி இல்லா தொலைத்தொர்புகள் மூலம், இந்நிறுவனத்தில் தலைமைப் பதவிகளை வழங்குவதன் மூலம், படிப்பில் திறமையுள்ள வண்ணப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.[10]