தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW), சனவரி 1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.[1]மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் விஜயா கிஷோர் ரஹத்கர் (2024)ஆவார்.
அரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சனை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[2]
மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மகளிர் (Rashtra Mahila) எனும் மாதாந்திர செய்தி இதழை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடுகிறது.[3]
எண். | பெயர் | படம் | முதல் | வரை |
---|---|---|---|---|
1 | ஜெயந்தி பட்நாயக் | ![]() |
3 பெப்ரவரி 1992 | 30 சனவரி 1995 |
2 | வி. மோகினி கிரி | ![]() |
21 சூலை 1995 | 20 சூலை 1998 |
3 | விபாகா பார்த்தசாரதி |
18 சனவரி 1999 |
17 சனவரி 2002 | |
4 | பூர்ணிமா அத்வானி | ![]() |
25 சனவரி 2002 | 24 சனவரி 2005 |
5 | கிரிஜா வியாஸ் | ![]() |
16 பெப்ரவரி 2005 | 15 பெப்ரவரி 2008 |
6 | கிரிஜா வியாஸ் | ![]() |
9 ஏப்ரல் 2008 | 8 ஏப்ரல் 2011 |
7 | மம்தா சர்மா[4] | ![]() |
2 ஆகத்து 2011 | 1 ஆகத்து 2014 |
8 | லலிதா குமாரமங்கலம் | ![]() |
29 செப்டம்பர் 2014 | 28 செப்டம்பர் 2017 |
9 | ரேகா சர்மா | 7 ஆகத்து 2018[5] | 6 ஆகத்து 2021 | |
10 | ரேகா சர்மா | 7 ஆகத்து 2021[6] |