தேசிய விரைவுசாலை 2 National Expressway 2 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு இதேநெஆ | |
நீளம்: | 135 km (84 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | குண்டிலி |
முடிவு: | பால்வால் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | காசியாபாத், நொய்டா பெருநகர், பால்வால், சோனிபத் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய விரைவுச்சாலை 2 (National Expressway 2) அல்லது KGP (சோனிபத் (குன்ட்லி)-காசியாபாத்-பல்வல்) கிழக்குப்புறத்தில் தில்லியைக்கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய விரைவுச்சாலை ஆகும். இந்தியத் தலைநகரைச் சுற்றி அரை வட்டமாக இருக்குமாறு அமைக்கப்படவுள்ள இச்சாலை ஐந்து மாவட்டங்களை கடந்து செல்லும்: அரியானா மாநிலத்தின் சோனிபத் மற்றும் பரிதாபாத் & உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பாக்பத், காசியாபாத் மற்றும் கெளதம் புத் நகர். இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 120 கிமீ ஆகும். இச்சாலையை மேம்படுத்த இந்திய அரசு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.[1]
இந்தச் சாலையானது தில்லி வழியாகச் செல்லும் 50,000 சரக்குந்துகளுக்கு மாற்றுப் பாதையாக விளங்கும். மேலும் இது தில்லியின் காற்று மாசினை 27% வரை குறைக்கும்.[2][3] இது 27 மே 2018 அன்று பிரதமர் நரேந்திர மோதியினால் திறந்து வைக்கப்பட்டது.[4] இச்சாலை யமுனா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும்.[5]