நிறுவப்பட்டது | 1950 |
---|---|
ஆய்வுப் பகுதி | வேதியியல் அறிவியல் |
பணிப்பாளர் | அசுவினி குமார் நங்கியா |
Staff | ≈200 (முனைவர் பட்டம்) |
மாணவர்கள் | 400 முனைவர் பட்ட மாணவர்கள் |
முகவரி | பூசண் சாலை |
அமைவிடம் | புனே, மகாராட்டிரா, இந்தியா 18°32′30″N 73°48′38″E / 18.541598°N 73.81065°E |
Zip code | 411008 |
Campus | நகர்புறம் |
Operating agency | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
இணையதளம் | www |
தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory (NCL) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாக 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஏறத்தாழ 200 வேதியல் ஆய்வாளர்கள் பணி செய்கின்றனர். இந்த வேதியல் ஆய்வகம் பாலிமர் அறிவியல், கரிம வேதியியல், வினையூக்கம், பொருட்கள் வேதியியல், வேதியியல் பொறியியல், உயிர்வேதியியல் அறிவியல் மற்றும் வேதியியல் செயல்முறை மேம்பாடு ஆகியவற்றில் புலமைப் பெற்றது. அளவீட்டு அறிவியல் மற்றும் வேதியியல் தகவல்களுக்கு இது நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் 400 மாணவர்கள் வேதியியல் துறையில் உயர் படிப்பு படிக்கின்றனர். மேலும் இந்த ஆய்வகம் ஆண்டுதோறும் 50 ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது.
தேசிய வேதியியல் ஆய்வகம் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. மேலும் இந்த ஆய்வகம் 60 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)