தேசிய பாதுகாப்பு அகாதமியின் சின்னம் | |
குறிக்கோளுரை | सेवा परमो धर्मः (சேவையே மேலான கடமை) (sēvā paramō dharma) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Service Before Self |
வகை | இராணுவப் பயிற்சி நிறுவனம் |
உருவாக்கம் | 7 டிசம்பர் 1954 |
முதல்வர் | லெப்டினன்ட் ஜெனரல் ஆசித் மிஸ்திரி |
அமைவிடம் | , , இந்தியா 18°25′20″N 73°45′55″E / 18.42222°N 73.76528°E |
வளாகம் | 7,015 ஏக்கர்கள் (28.39 km2) |
நிறங்கள் | மெரூன் நிறம்[1] |
சேர்ப்பு | ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
இணையதளம் | nda.nic.in |
தேசியப் பாதுகாப்புக் கழகம் (National Defence Academy; NDA) இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பயிற்சி மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் நிறுவனம் ஆகும். 7 டிசம்பர் 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி நிறுவனம், மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் உள்ள கடக்வாஸ்லாவில் செயல்படுகிறது. இதன் தலைவர் இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஆவார். இந்த அகாதமியில் படித்த இராணுவ அதிகாரிகள் 3 பரம் வீர் சக்ரா விருதுகளும் மற்றும் 12 அசோகச் சக்கர விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த அகாதமியில் பயிற்சி பெற்றவர்கள் இதுவரை 27 பேர் தலைமை இராணுவ அதிகாரிகளாக நியமனம பெற்றுள்ளனர்.[2][3]30 நவம்பர் 2019-இல் 137-வது பயிற்சி வகுப்பு முடித்த மாணவர்களில் தரைப்படை பிரிவினர 188, கப்பற்படையினர் 38, விமானப்படைப் பிரிவினர் 37 மற்றும் நட்பு நாடுகளின் பயிற்சி மாணவர்கள் 20 பேர் ஆவார்.[4]
புனே நகரத்தின் வடமேற்கில் கடக்வாஸ்லா ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்த தேசிய பாதுகாப்பு அகாதமியின் வளாகம் 7,015 ஏக்கர்கள் (28.39 km2) பரப்பளவு கொண்டது[5]
இந்திய தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர்வதற்கு கீழ்கண்ட கல்வி & உடல் தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.[6]
கல்வி ஆண்டிற்கு (சனவரி முதல் மே மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) இரு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மூன்றாண்டு பயிற்சியும், ஆறு பருவத்தேர்வுகளும் கொண்டது.
தேசிய பாதுகாப்பு அகாதமியின் தலைமை கட்டளை அதிகாரிகளாக இந்திய இராணுவத்தின் முப்ப்டைத் தலைவர்களில் ஒருவரை சுழற்சி முறையில் நியமிக்கப்படுவர்.[7]
1995-ஆம் ஆண்டு வரை யுபிஎஸ்சி நடத்திய எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, தேசிய பாதுகாப்பு அகாதமிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, விரிவான நேர்காணல்கள், தர்க்கரீதியான பகுத்தறிவு, உளவியல் சோதனை, குழு திறன்கள் மற்றும் உடல் மற்றும் சமூக திறன்கள், மருத்துவ சோதனைகளுடன் அகாதமிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில், ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எழுத்துத் தேர்வுக்கும் சுமார் 4,50,000 விண்ணப்பதாரர்கள் அமர்ந்துள்ளனர். சேர்கையின் போது குறைந்தபட்ச வயது 16 மற்றும் அரை ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 19 மற்றும் அரை ஆண்டுகள் ஆகும். இருக்க வேண்டும்.பொதுவாக, இவர்களில் சுமார் 6,300 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.[8]
ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்படும் 370 மாணவர்களில் 120 பேர் விமானப் படைப் பயிற்சிக்கும், 42 பேர் கப்பல் படைக்கும், 208 பேர் தரைப்படைக்கும் தேர்வு செய்யப்படுகிறார்கள்[9]தேசியப் பாதுகாப்பு அகாதமியின் தரைப்படைப் பிரிவில் தேறிய மாணவரகள் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் அதிகாரி எனும் தகுதி வழங்கப்படும். அதே போன்று விமானப்படைப் பிரிவில் பயிற்சி முடித்த மாணவர்கள் ஐதராபாத்தில் உள்ள இந்திய வான்படை அகாதமியில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ய வேண்டும். கப்பல் படை பயிற்சி முடித்தவர்கள் கேரளா மாநிலத்தின் எழிமலை எனுமிடத்தில் அமைந்த இந்தியக் கடற்படை அகாதமியில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.[10]
{{cite web}}
: CS1 maint: others (link)
...Lieutenant General or equivalent is appointed as the Commandant.
{{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)