இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் "நோ-ஃப்ரில்ஸ் மாதிரியினை" செயல்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஐந்து வானூர்தி நிலையங்களுள் தேசு ஒன்றாகும். இது, விமான நிலையத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்கும். இருப்பினும் எந்த வகையிலும் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் சேவை வழங்கப்படும். குறைந்த செலவில் செயல்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், விமான நிலையத்தில் கொணரி பட்டைகள், வான்பாலம் இல்லை மற்றும் புறப்படும் பயணிகளுக்கான பாதுகாப்புப் பகுதி மட்டுமே குளிரூட்டப்பட்டதாக இருக்கக்கூடும்.[4]
விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு ₹79 கோடி, 2009-10 காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது.[5]
ஓடுபாதையை 1500 மீட்டராக நீட்டித்தல், முனையக் கட்டிடம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் கட்டுமானம் 2014க்குள் முடிக்கப்பட இருந்தது.[1] இருப்பினும், உள்ளூர் வாசிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் தாமதங்களை எதிர்கொண்டது மற்றும் காலக்கெடு தவறவிட்டது.[6]
ஓடுபாதையின் கட்டுமானப் பணிகள் மற்றும் எல்லைச் சுவர்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தன.[7]
சோதனை விமானம் ஒன்று 22 செப்டம்பர் 2017 அன்று ஓடுபாதையில் தரையிறங்கியது.[8]
மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி 9 பிப்ரவரி 2019 அன்று திறந்து வைத்தார்.[3]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன