தேனி குஞ்சரம்மாள் | |
---|---|
இயற்பெயர் | குஞ்சரம்மாள் |
பிறப்பு | தேனி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 18/04/2008 |
தொழில்(கள்) | நடிகை, பாடகர் |
இசைத்துறையில் | 1993–2008 |
தேனி குஞ்சரம்மாள் (Theni Kunjarammal) என்பவர் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். 1990 கள் மற்றும் 2000 கள் ஆகியவற்றில் ஏ. ஆர். ரகுமான் இசையில் பின்னணிப் பாடகியாக பணியாற்றினார். இவர் ஹாரிஸ் ஜயராஜ் இசையிலும் பணியாற்றினார்.
கருத்தம்மா (1994) திரைப்படத்தில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தின் மூலம் அறியப்படுகிறார். நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் காதல் சடுகுடு (திரைப்படம்) (2003) திரைப்படத்தில் குஞ்சரம்மாளுடன் நடித்தார்.[1][2]
ஏ. ஆர். ரகுமான் இசையில் காதலன் (திரைப்படம்) (1994), முத்து (1995), தாஜ்மகால் (1999) and சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) (2006) போன்ற திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார்.[3][4]
இளையராஜா இசையில் விருமாண்டி (2004) மற்றும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் அருள் (திரைப்படம்) (2004) போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.[5]
2006 ஜூன் மாதத்தில் குஞ்சரம்மாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார். ஜெ. ஜெயலலிதா மேடையில் குஞ்சரம்மாள் பாடியுள்ளார்.[6]
ஆண்டு | பாடல் | திரைப்படம் | இசை அமைத்துள்ளார் | உடன் பாடுபவர்கள் | குறிப்பு |
---|---|---|---|---|---|
1994 | "பேட்டா ராப்" | காதலன் (திரைப்படம்) | ஏ. ஆர். ரகுமான் | சுரேஷ் பீட்டர்ஸ் & சாகுல் ஹமீது | |
1994 | "ஆராரோ ஆரிராரோ" | கருத்தம்மா (திரைப்படம்) | ஏர்.ஆர்.ரகுமான் | டி.கே.கலா & தீபன் சக்ரவர்த்தி | |
1995 | "கொங்கு சைவ கொக்கு" | முத்து | ஏர். ஆர். ரகுமான் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், செபி மணி, கங்கா சித்தராசு & ஏ. ஆர். ரகுமான் | |
1999 | "அடி மஞ்சக்கிழங்கே" | தாஜ்மகால் | ஏர். ஆர். ரகுமான் | கங்கா சித்தராசு, பெபி மணி & காஞ்சனா | |
1999 | "கிழக்கே நந்தவனம்" | தாஜ்மகால் | ஏர். ஆர். ரகுமான் | கங்கா சித்தராசு, பெபி மணி & காஞ்சனா | |
2004 | "மாடல் விளக்கே" | விருமாண்டி | இளையராஜா | கமல்ஹாசன் | |
2004 | "மகராசி மண்ணே விட்டு போனியே" | விருமாண்டி | இளையராஜா | ||
2004 | "ஊதக்காத்து" | அருள் (திரைப்படம்) | ஹரீஸ் ஜெயராஜ் | திப்பு & எல். ஆர். ஈஸ்வரி | |
2006 | "கும்மி அடி" | சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) | ஏர். ஆர். ரகுமான் | சீர்காழி கோ. சிவசிதம்பரம், சுவர்ணலதா (பின்னணிப் பாடகி), நரேஷ் ஐயர் & விக்னேஷ் |