இது தேனுகா இராகத்தைப் பற்றிய கட்டுரை . எழுத்தாளர் தேனுகா குறித்து படிக்க தேனுகா (எழுத்தாளர்)
தேனுகா இராகம், கருநாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி1 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | தெலியலேதுராமா | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | கருணைக்கடலே | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | கேட்டவரம் அருளும் | அம்புஜம் கிருஷ்ணா | ஆதி |
கிருதி | இனி என்னக்குறை | பெரியசாமித் தூரன் | ஆதி |
கிருதி | ராமாபிராமா | வீணை சேஷண்ணா | ரூபகம் |
கிருதி | தெரிசனமே | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | அரசேயான் | இலட்சுமணப்பிள்ளை | ரூபகம் |
கிருதி | ஸ்ரீகுருகுஹ மூர்த்தி | பொன்னையா பிள்ளை | ரூபகம் |
கிருதி | காமதேனுகா | சுத்தானந்த பாரதியார் | திஸ்ர ஜம்பை |
தேனுகாவின் ஜன்ய இராகங்கள் இவை.