தேபியோலைட்டு

தேபியோலைட்டு
Tapiolite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Fe, Mn)(Nb, Ta)2O6
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணகம்
மேற்கோள்கள்[1]

தேபியோலைட்டு (Tapiolite) என்பது [(Fe, Mn)(Nb, Ta)2O6] என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நையோபியம் மற்றும் தாண்டலம் தனிமங்களின் தாதுவாக தேபியோலைட்டு கருதப்படுகிறது. தேபியோலைட்டு குழுவில் தேபியோலைட்டு-(Fe) அல்லது பெரோதேபியோலைட்டு மற்றும் தேபியோலைட்டு-(Mn) அல்லது மாங்கனோதேபியோலைட்டு ஆகியவையும் அடங்கும்.[2][3][4] இவ்விரண்டில் தேபியோலைட்டு-(Fe) மிகவும் பொதுவானதாகும்.[5][6]

இக்கனிமங்கள் உலோகங்களின் பளபளப்பை ஒத்திருக்கும் ஆனால் குறைவான பிரதிபலிப்புடனும் தோற்றத்தில் மந்தமாகவும் காணப்படும். இக்குழு கனிமங்கள் உயர் ஒப்படர்த்தியை கொண்டிருக்கும். தேபியோலைட்டு--Fe கனிமத்தின் ஒப்படர்த்தி 7.90 ஆகும்.[5] தேபியோலைட்டு-Mn கனிமத்தின் ஒப்படர்த்தி 7.72 ஆகும்.[6]

பின்லாந்து நாட்டுப் புராணங்களின் வனக் கடவுளான தேபியோவின் நினைவாக இந்த கனிமத்திற்கு 1863 ஆம் ஆண்டில் தேபியோலைட்டு என பெயரிடப்பட்டது. மேலும் அசல் தேபியோலைட்டு கனிமப் பொருள் சுகுலா, தம்மேலா, தவாசுடியா புரோப்பர் ஆகிய பின்லாந்து பகுதிகளில் கிடைத்தது.[2][7]

தேபியோலைட்டு கனிமம், கூலும்பைட்டு மற்றும் தாண்டலைட்டு கனிமங்களுக்கு மிக அருகில் உள்ளது. இந்த தாதுக்கள் ஒரே வேதியியல் இயைபைக் கொண்டுள்ளன. ஆனால் வெவ்வேறு மூலக்கூற்று சாச்சீரில் உள்ளன. தாண்டலைட்டு அல்லது கூலும்பைட்டுக்கு செஞ்சாய்சதுரச் சமச்சீரும் தேபியோலைட்டுக்கு நாற்கோண சமச்சீரும் அமைந்துள்ளன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 Mindat tapiolite group
  3. Ferrotapiolite in the Handbook of Mineralogy
  4. Manganotapiolite in the Handbook of Mineralogy
  5. 5.0 5.1 Tapiolite-Fe on Mindat
  6. 6.0 6.1 Tapiolite-Mn on Mindat
  7. webmineral Tapiolite
  8. P. Cerny et al. "The tantalite-tapiolite gap: natural assemblages versus experimental data" Canadian Mineralogist 30 (1992) 587 free download