தேர்தல் நடத்தும் அலுவலர் (returning officer) என்பது பல்வேறு பாராளுமன்ற அமைப்புகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல்களை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளவரைக் குறிப்பதாகும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் படி, பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பானவர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆவார். அவர், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல்களின் தலைவராக உள்ளார். பொதுவாக, மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, அது மாவட்ட நீதிபதியாகவும், மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, துணைப்பிரிவு நீதிபதியாகவும் இருப்பார். தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை செயல்முறையை நடத்துவதற்கும், வாக்குச் சீட்டின் செல்லுபடியை தீர்மானிப்பதற்கும் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்றவராக உள்ளார், அவரது முடிவினை மறுதளிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.[1]
இந்தியத் தேர்தல் ஆணையம் மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரியாக அரசு அல்லது உள்ளூர் அதிகாரியை நியமிக்கிறது. மேலும், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவித் தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக நியமிக்கிறது.[2]