தேவி 2 | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | ஏ. எல். விஜய் |
தயாரிப்பு | ஐசரி கே. கணேஷ் ஆர். ரவீந்திரன் |
திரைக்கதை | ஏ. எல். விஜய் சத்யா |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அயனன்கா போஸ் |
படத்தொகுப்பு | அன்டனி |
கலையகம் | ஜிவி பிலிம்ஸ் (தமிழில்) அபிஷேக் பிக்சர்ஸ் (தெலுங்கில்) டிரண்ட் ஆர்ட்ஸ் |
விநியோகம் | ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டைமண்ட் |
வெளியீடு | 31 மே 2019 |
ஓட்டம் | 126 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
தேவி 2 (Devi 2) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தேவி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.[1] இந்தப் படத்தில் பிரபுதேவா, தமன்னா முன்னணி கதாபாத்திரங்களிலும், நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவை சரளா, அஜ்மல் அமீர், ஆர். ஜே. பாலாஜி மற்றும் சப்தகிரி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் அபிநேத்ரி 2 என்ற பெயரில் படமாக்கப்பட்டு 31 மே 2019 அன்று வெளியிடப்பட்டது.[2][3][4]
தேவி திரைப்படத்தின் தொடர்ச்சியாக கதை ஆரம்பிக்கின்றது. தேவியிற்கு (தமன்னா) ரூபி என்ற பேய் பிடித்ததை மறைக்கவும், மீண்டும் ரூபியினால் தொல்லை ஏற்படாமல் இருக்கவும் கிருஷ்ணா (பிரபு தேவா) சோதிடரின் கூற்றுக்கு இணங்கி தங்கள் மகளை தேவியின் பெற்றோருடன் இந்தியாவில் விட்டு தேவியுடன் மொரிசியஸ் தீவிற்கு பணி மாற்றலாகி செல்கிறார். தேவி மொரிசியஸில் வழக்கறிஞர் லலிதாவுடன் (கோவை சரளா) நட்பு கொள்கிறார்.
ஒரு நாள் ஏதேச்சையாக சாரா (நந்திதா சுவேதா) என்ற பெண்ணுடன் கிருஷ்ணாவை பார்த்து சந்தேகம் கொண்டு கிருஷ்ணாவிடம் கேட்கிறார். ஆனால் அவர் நாள் முழுதும் வேலை செய்தேன் என்றும் தேவி வேறோருவரை பார்த்து தவறாக புரிந்து கொண்டாள் என்றும் பதிலளிக்கிறார். லலிதா தேவியை சமாதானப் படுத்துகிறார். மீண்டும் ஒரு நாள் தேவியும், லலிதாவும் கிருஷ்ணாவை ஈஷா (டிம்பிள் ஹயாதி) உடன் காண்கிறார்கள். கிருஷ்ணாவிடம் வினவும் போது தேவியை மட்டுமே நேசிப்பதாக உறுதியளிக்கிறார். அடுத்த சில நாட்களில் இதேபோன்ற பல சம்பவங்கள் நிகழ்கின்றன. கிருஷ்ணா நிச்சயமாக சாரா மற்றும் ஈஷாவுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்த தேவி விசாரிக்க முடிவு செய்கிறார்.
ருத்ரா (அஜ்மல் அமீர் ) தலைமையிலான இசைக்குழுவைச் சேர்ந்த சாராவை தேவி பின்தொடர்கிறார். சாராவை நேசித்த விபத்தில் இறந்த அலெக்ஸ் என்பவரை தேவி அறிந்துகொள்கிறார். ஈஷாவை திருமணம் செய்ய விரும்பிய ரங்கா ரெட்டி என்ற நபரும் விபத்தில் இறந்தார் என்ற தெரிந்து கொள்கிறார். இரு பெண்களும் தங்களை நேசித்த ஒருவரை இழந்துவிட்டதால் ஏதோ தவறாக இருப்பதாக தேவி உணர்கிறார், கிருஷ்ணா அவர்களைச் சுற்றி வருவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்றும் நம்புகிறாள். அன்று இரவு அவள் கிருஷ்ணா தனியாக நடந்து செல்வதை பார்க்கிறாள். அவள் சந்தேகத்தை உறுதிப்படுத்த முடிவு செய்து கிருஷ்ணாவை அலெக்ஸ் மற்றும் ரங்கா ரெட்டி என்று அழைக்கிறாள். இந்த இரண்டு பெயர்களுக்கும் கிருஷ்ணா பதிலளிப்பதைக் கண்டு அவள் பயப்படுகிறாள். கிருஷ்ணா இரண்டு ஆண் பேய்கள் பிடித்திருப்பதை அறிந்து கொள்கிறாள்.
கிருஷ்ணாவிற்கு பிடித்திருக்கும் பேய்களை கிருஷ்ணா உட்பட யாருக்கும் தெரியாமல் தேவியும், லலிதாவும் பேய்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி எவ்வாறு கிருஷ்ணாவை மீட்கிறார்கள் என்பதும் அதன்போது அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதுமே படத்தின் மீதிக்கதை ஆகும்.
இயக்குநர் ஏ. எல். விஜய் தேவி திரைப்படத்தின் தொடர்ச்சியை வெளியிடுவதாக அறிவித்தார். பிரபுதேவா, தமன்னா, சோனு சூத், ஆர். ஜே. பாலாஜி மற்றும் சப்தகிரி இத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[8]
இத் திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்தார். தமிழில் பாடல் வரிகளை நா. முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் எழுதினார்கள். தெலுங்கில் ராமஜோகயா சாஸ்திரியும், வனமாலியும் பாடல் வரிகளை எழுதினர்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: |first=
missing |last=
(help)
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Check date values in: |date=
(help)