தேவிமலை (Devimala) என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தேவிகுளம் தாலுக்காவில் அமைந்துள்ள 14வது உயர்ந்த சிகரமாகும்.[1] தேவிமலை சிகரம் கேரளாவில் ஆனைமலைப் பகுதியில் உள்ளது.[2] இது மூணாறுக்கு அருகே தேவிகுளம் தேயிலைத் தோட்டப்பகுதியில் அமைந்துள்ளது. தேவிகுளம் மலைப்பகுதியில் உள்ள உயர்ந்த சிகரம் இதுவாகும். இது சுமார் 2,521 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது(8731 அடிகள்).[3] ஆனைமுடி இந்த சிகரத்தின் அருகே அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் 7வது உயர்ந்த பகுதியாகும்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)