தேவேந்திரலால் | |
---|---|
பிறப்பு | வாரணாசி, இந்தியா | 14 பெப்ரவரி 1929
இறப்பு | 1 திசம்பர் 2012 லா யொல்லா, கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை 83)
தேசியம் | இந்தியா |
துறை | புவி இயற்பியல் |
துணைவர் | அருணா லால் |
தேவேந்திரலால் (Devendra Lal),(பிப்ரவரி 14, 1929 - டிசம்பர் 1, 2012), இவர் வாரணாசியில்[1] பிறந்த ஓர் இந்திய புவி இயற்பியல் விஞ்ஞானியாவார். பழமையான இலண்டன் இராயல் கழகத்தின் எப்.ஆர்.எசு விருது பெற்றவர்.
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் [2] பட்டப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மேற்படிப்பை நிறைவு செய்தார். டாட்டா நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பேராசிரியர் பர்னார்டு பீட்டர்சு என்பவரின் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். விண்வெளியிலுள்ள அண்டக் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இவர் எழுதினார் [3] அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குனராக 1972 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் [4]. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோவில்1989 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கௌரவப் பேராசியராகவும் பணியாற்றியுள்ளார் [5][6].