தையாசு கேரினாட்டா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | தையாசு
|
இனம்: | தை. கேரினாட்டா
|
இருசொற் பெயரீடு | |
தையாசு கேரினாட்டா (குந்தர், 1858) |
தையாசு கேரினாட்டா (Ptyas carinata) என்பது பொதுவாக இணைச் சாரைப்பாம்பு என்று அழைக்கப்படும். இது கொலுப்பிரிடே பாம்புக் குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும்.[2][3] இந்த பாம்பு இந்தோனேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் சிங்கப்பூரில் காணப்படுகிறது. அதிகம் அறியப்படாத இந்த சிற்றினம், உயிருள்ள பாம்பு இனங்களில் பாதிக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய கொலுப்பிடே குடும்பத்திலுள்ள மிகப்பெரிய சிற்றினமாக இருக்கலாம். தைவானில் இந்த இனத்தின் பாம்புகளின் அறியப்பட்ட பாம்பின் நீளம் 1.12 முதல் 2.75 மீ (4 அடி முதல் 9 அடி வரை) வரை அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் அதிகபட்ச நீளம் சுமார் 4 மீட்டர் என்று கூறப்படுகிறது. ஆண் பாம்புகளின் சராசரி அளவு பெண் பாம்புகளை விடச் சற்றே பெரியதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் பல்லிகள் குறிப்பிடத்தக்க இரையாகக் கருதப்பட்டாலும், இவை கொறித்துண்ணிகள் போன்ற பல்வேறு இரைகளை சில சந்தர்ப்பங்களில் வேட்டையாடுபவையாக இருக்கலாம்.