தொடர் (Serial) என்பது தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியான அத்தியாயங்கள் பாணியில் வெளிவரும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இது பொதுவாக முழு தொலைக்காட்சி தொடராக அல்லது பருவங்களாக கொண்டு முக்கிய கதை அம்சத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படுகின்றது. சில நேரங்களில் வழித்தொடராக ஒரு தொடரில் இருந்து ஒரு கதாபாத்திரம் வாயிலாக தயாரிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து நாட்டில் தொடர்கள் நன்கு அறியப்பட்ட இலக்கியப் படைப்புகளின் தொடர்கதைகளை நேரடி தழுவல்களாக கொண்டு உருவாக்குவதுடன் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாயங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றது.[1] ஆனால் தமிழ்த் தொடர்கள் இதற்க்கு நேர்மறையாக குடும்ப பின்னணி மற்றும் பழிவாங்குதல் போன்ற கதைக்கருவை மையமாக வைத்து பல எண்ணிக்கையான அத்தியாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
ஒரு தொடர் கதை பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பல மர்மமான மற்றும் பரப்பான முடிச்சுகளை ஒவ்வொரு அத்தியாயத்தின் மூலம் அவிழ்ப்பது போன்றே தயாரிக்கப்படும்கின்றன.[2] இது காணெளி காட்சி பதிவு சாதனங்களின் கண்டுபிடிப்புக்கு பிறகு இந்த வகை நிகழ்ச்சியை காண்பது எளிதாக்கியுள்ளது, இதன் விளைவாக தொடர்களுக்கு வெற்றியும் மற்றும் புகழும் அதிகரித்துள்ளது.