தொடர் மதிப்பீடு (Continuous assessment) என்பது ஒரு குறிப்பிட்ட பருவம் முழுவதும் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை மதிப்பிடும் கல்வித் தேர்வின் ஒரு வடிவமாகும். இது பெரும்பாலும் இறுதித் தேர்வு முறைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான மதிப்பிடுதல், மாணவர்களது கற்றல் திறனை முறையாகக் கண்காணித்தல், கற்றலின் போது தங்களது திறனை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு வழிவகை செய்கிறது.[1]
- விரிவானது
- திறள் விளைவு
- சிக்கலைக் கண்டறிதல்
- வளரறி மதிப்பீடு
- வழிகாட்டுதல் சார்ந்தது
- முறையான இயல்புடையது
தொடர்ச்சியான மதிப்பீடு பின்வரும் வழிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவும்:
- தொடர்ச்சியான மதிப்பீடு மாணவர்களின் செயல்திறன் பற்றிய ஆரம்ப அறிகுறிகளை வழங்க முடியும்.[சான்று தேவை]
- சேர்ப்பு முறையின் பயன்: தொடர்ச்சியான மதிப்பீடு மாணவர்களுக்குத் தங்களின் திறனை நிரூபிப்பதற்கான தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் போதுமான நேரத்தையும் பயிற்சியையும் அளித்தால் அனைவரும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையினை உருவாக்குகிறது. இது தேர்வு குறித்தான கவலையைக் குறைத்து கற்றலுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.[சான்று தேவை]
- அனைவருக்கும் உயர் கற்றல் தரநிலைகளை வழங்கல்: தொடர்ச்சியான மதிப்பீட்டில், விரைவாகக் கற்கக் கூடிய மாணவர்கள், தங்களது வேகத்திற்கு ஏற்ப கற்க இயலும்.
- அதிக அழுத்தம்: இறுதித் தேர்வு முறையைப் போலன்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பாடத்திட்டம் அல்லது பயிற்சி முழுவதும் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அனைத்து வேலைகளும் இறுதித் தரத்தை நோக்கியே கணக்கிடப்படும். இது கற்பவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.ஆண்டு இறுதித் தேர்வு முறையில் மாணவர்கள் நல்ல தர நிலையினைப் பெறுவதற்காக, தேர்வுக்கு முன் "மனனம்" செய்யலாம் அல்லது நீண்ட நேரம் படிக்கலாம்.
- கருத்துத் திருட்டு ஆபத்து: வீட்டுப்பாடம் மற்றும் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், சிறந்த மதிப்பெண்ணைப் பெறுவதற்காக மாணவர்கள் அறிவுத் திருட்டில் ஈடுபடலாம்.
- ↑ "தொடர் மதிப்பீட்டு முறை- ஆசிரியர்களுக்குப் பயிற்சி". Dinamani. Retrieved 2022-11-29.