தொடர் வல்லுறவாளர் (ஆங்கிலம்:Serial rapist) என்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய நபராவார். பல சமயங்களில் ஒரு தொடர் வல்லுறவாளர் எண்ணற்ற வல்லுறவுகளை சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிகழ்த்துகிறார்.[1] சில தொடர் வல்லுறவாளர்கள் குழந்தைகளைக் குறிவைத்து செயல்பட்டுள்ளனர்.[2][3][4] தொடர் வல்லுறவு மற்றும் பலவித குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை சில சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.[5]
இவ்வாறு தொடர் வல்லுறவு கொள்ளுகின்ற பலரும் ஒரு வித வரையறையுடன் இயங்குவதைக் கண்டறிந்துள்ளனர். இவர்கள் பாலியல் வல்லுறவு கொள்ளுகின்றவர்களை விட வினோதமாக நபர்களை கடத்திச் சென்று அவர்களை உடல்ரீதியான துன்புறுத்தல்களையும், ஆயுதங்களால் தாக்கியும் துன்புறுத்துகின்றனர்.[6][7]