மாற்றுப் பெயர்கள் | இப்பலகாரம் சர்க்கரைக் கழி |
---|---|
வகை | குளிர்ச்சியான |
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்புவகை |
முக்கிய சேர்பொருட்கள் | இதனைப் பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய் |
தொதல் அல்லது தொடோல் (சிங்களம்: දොදොල්), (ஆங்கில மொழி: dodol) என்பது இலங்கைச் சோனகர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புவகை உணவு ஆகும்.[1] இது மலாயா வழியாக இலங்கை வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[2] இப்பண்டம் யாழ்ப்பாணத்தில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.[3] இதனைப் பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்வர்.
யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் 'சர்க்கரைக் கழி' என்று அழைக்கப்படுகிறது.[4] சிங்களவர்கள் இதனைக் களுதொதல் என்பார்கள். அவர்கள் கித்துள்பனங்கட்டியையே தொதல் செய்யப் பயன்படுத்துவார்கள்.