தொற்று நோய்கள் சட்டம், 1897 | |
---|---|
தீவிரத் தொற்று நோய்ககளை பரப்பவுதை தடுக்கும் சட்டம் | |
சான்று | Act No. 3 of 1897 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சட்ட திருத்தங்கள் | |
தொற்று நோய்கள் (பஞ்சாப் திருத்தச்) சட்டம், 1944 மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி தொற்று நோய்கள் திருத்தச் சட்டம், 1 சூலை 1965 | |
முக்கிய சொற்கள் | |
கிருமித் தொற்று பரவல் & நோய்கள் |
தொற்று நோய்கள் சட்டம், 1897 (Epidemic Diseases Act, 1897) பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் தலைநகரமான மும்பை நகரத்தில் முதன் முதலில் 1987-இல் எர்சினியா பெசுட்டிசு எனும் பாக்டீரியா மூலம் பிளேக் எனும் நோய்த்தொற்று பரவி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.இத்தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டி அவசர கால நடவடிக்கையாக 1987-இல் பிரித்தானிய இந்தியா நாடாளுமன்றம், தொற்று நோய்கள் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் கீழ் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கவும், தொற்று நோய் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய மாகாண அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.[1][2]
மேலும் இச்சட்டத்தின் கீழ் காலரா, பன்றிக் காய்ச்சல், மலேரியா டெங்குக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தவதை, இந்தியாவின் மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வகை செய்கிறது.[3] 2018-இல் குஜராத்தில் காலரா பரவல், 2015-இல் சண்டிகர் நகரத்தில் டெங்குக் காய்ச்சல் மற்றும் மலேரியா தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், 2009-இல் புனே நகரத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்று நோயையைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
மார்ச் 2020-இல் இந்தியா முழுவதும் கொரானாத் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தவும் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.[3]
தொற்று நோய்கள் சட்டத்தில் தண்டனைகள் வழங்கும் பிரிவு 2 கீழ்கண்டவாறு கூறுகிறது:[1][2][4]
2.தீவிரத் தொற்று நோய்களை பரவுதை தடுக்க மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள்
- (1) எந்த நேரத்திலும் [மாநில அரசு] அல்லது அதன் எந்தப் பகுதியும் ஏதேனும் ஆபத்தான தொற்றுநோய்களின் பரவலை [மாநில அரசு] பார்வையிட்டால் அல்லது அச்சுறுத்தப்படுவதாக (மாநில அரசு) திருப்தி அடைந்தால், மாநில அரசு, அசாதாரணமானது என்று நினைத்தால் நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் விதிகள் நோக்கத்திற்காக போதுமானதாக இல்லை எனில், எந்தவொரு நபரும் எடுக்க வேண்டிய, அல்லது தேவைப்படும் அல்லது அதிகாரம் அளிக்கக் கூடியவை, அத்தகைய நடவடிக்கைகள் மற்றும், பொது அறிவிப்பின் மூலம், பொதுமக்கள் அல்லது எந்தவொரு நபரும் கடைபிடிக்க வேண்டிய தற்காலிக விதிமுறைகளை பரிந்துரைக்கிறது. அல்லது அத்தகைய நோய் வெடிப்பதைத் தடுக்க அல்லது அது பரவுவதைத் தடுப்பதற்கு அவசியமானதாகக் கருதப்படும் நபர்களின் வர்க்கம், எந்த விதத்தில் மற்றும் யாரால் ஏற்படும் செலவுகள் (ஏதேனும் இருந்தால் இழப்பீடு உட்பட) என்பதை தீர்மானிக்கலாம்.
2A. இந்திய அரசின் அதிகாரங்கள் இந்தியா அல்லது அதன் எந்தப் பகுதியும் எந்தவொரு ஆபத்தான தொற்று நோயையும் வெடிக்கச் செய்வதாக அல்லது அச்சுறுத்தப்படுவதாகவும், அத்தகைய நோய் வெடிப்பதைத் தடுக்க சட்டத்தின் சாதாரண விதிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும் மத்திய அரச திருப்தி அடைந்தால் அல்லது அதன் பரவல், எந்தவொரு கப்பல் அல்லது கப்பலை விட்டு வெளியேறுவது அல்லது எந்தவொரு துறைமுகத்திற்கு வருவது மற்றும் அதைக் காவலில் வைப்பது, அல்லது அதில் பயணம் செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது அதன் மூலம் வருவது போன்றவற்றுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விதிமுறைகளை பரிந்துரைக்கலாம்.
3. தண்டனைகள்.
- இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது உத்தரவுக்கும் கீழ்ப்படியாத எந்தவொரு நபரும் இந்திய தண்டனைச் சட்டதின் படி, தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுவார்.
4. இச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் நபர்கள்
- நல்லெண்ணத்துடன் செயல்படும் எவர் மீதும் இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்ட முடியாது.
2020-இல் இந்தியாவில் கொரானத் தொற்று பரவுவதை தடுக்க, இந்திய அமைச்சரவைச் செயலாளர், 1897 ஆண்டின் தொற்று நோய்கள் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் 1860 ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 45-இன் கீழ் நடவடிக்கைகள் எடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு அறிவித்தார்.[5]
{{cite web}}
: CS1 maint: others (link) CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)