தொலைக்காட்சி அலைவாங்கி (TV aerial அல்லது TV Antenna) காற்றில் பரப்பப்படும் புவிப்புறத் தொலைக்காட்சி குறிப்பலைகளை பெறுவதற்கான சிறப்பு அலைவாங்கிகளாகும். இவை அதி உயர் அதிர்வெண் பட்டையில் 41 முதல் 250 மெகாஹெர்ட்சு வரையும் மீ உயர் அதிர்வெண் பட்டையில் 470 to 960 மெகாஹெர்ட்சு வரையுமுள்ள அதிர்வெண்களில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளை உள்வாங்கக் கூடியவை. இவை இரண்டு வகையாக தயாரிக்கப்படுகின்றன:
மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் அலைவாங்கிகள்: இருமுனைவ அலைவாங்கியும்[1] ("முயல் காதுகள்") சுருள் அலைவாங்கிகளுமாகும். பெரிய அலைவாங்கிகளில் யாகி அலைவாங்கியும்[1] மடக்கை அமைப்பிட அலைவாங்கியுமாகும்.[1]