வலைத்தளம் | http://www.kerala.gov.in/dept_archaeology/index.htm |
---|
தொல்பொருள் அருங்காட்சியகம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் திருச்சூர் மிருகக்காட்சிசாலை வளாகத்தில் அமைந்துள்ளது.
திருச்சூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடம் கொல்லங்கோடு மன்னரால் அவருடைய மகளுக்காக 1904ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடமாகும். பண்பாடு, சமயம், நிகழ்த்துகலை, கட்டடக்கலை, இலக்கியம் உள்ளிட்ட மாநிலத்தின் பல பொருண்மைக் கூறுகளை வெளிப்படுத்துகின்ற பல சிறப்புகளை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருள்கள் கொண்டு அமைந்துள்ளன.இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் அங்கு காணப்படுகின்ற ஓவியங்களின் மூலம் அவற்றை வெளிப்படுத்துகின்றன. தொல்லியலாளர்கள் இந்த அருங்காட்சியகத்தை இந்தியாவில் உள்ள அருங்காட்சியங்களில் முக்கியமான ஒன்றாகவும், கலைப்பொருள்களின் அணுக்கம் சிறப்பாக உள்ளதாகவும், அவற்றின் அமைப்பும் வகைப்பாடும் உணர்த்துவதாகக் கருதுகின்றனர்.[1]கொச்சின் அரசின் நிர்வாகத்தின்கீழ் 1938 ஆம் ஆண்டில் இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் ஸ்ரீ முலாம் சித்ராசலா (பட தொகுப்பு) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. காட்சிக்கூடமானது திரிசூர் நகரத்தில் உள்ள திருச்சூர் டவுன் ஹாலின் பால்கனியில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அத்துடன் ஒரு தொல் பொருள் காட்சிக்கூடம் 1948 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில், தொல்லியல் துறை திருச்சூர் நகரத்தில் உள்ள செம்புகா என்ற ஒரு இடத்தில் ஒரு கட்டிடத்தை வாங்கியது. அதன் பின்னர் தொல்பொருள் மற்றும் படக்காட்சிக் கூடங்கள் 1975 ஆம் ஆண்டில் அந்த புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கு திருச்சூர் தொல்பொருள் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற மற்றும் புகழ்பெற்ற நபர்களின் முழு உருவச் சிலைகள், பழங்கால கோவில்களின் மாதிரிகள், நினைவுச்சின்னங்கள், உலர்ந்த பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், மண் பானைகளைக் கொண்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மண் பானைகள் உள்ளிட்ட சேகரிப்புப் பொருள்கள், (நன்னங்கடி) கருப்பு மற்றும் சிவப்பு கற்கள், ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பா போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கருவிகள் உள்ளன. செராமன் பரம்பு (கொடுங்கல்லூர்) என்னுமிடத்தில் அகழ்வாராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட பொருள்கள், 10 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல் சிற்பங்கள், 12 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை காலத்தைச் சேர்ந்த வெண்கல சிற்பங்கள் ஆகியவையும் இங்கு உள்ளன. இந்த அருங்காட்சியக்ததில் திருச்சூர் மாவட்டம், வயநாடு மாவட்டம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2][3][4]
இந்த அருங்காட்சியகமானது திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும். பார்வையிட சிறந்த மாதங்கள் செப்டம்பர் முதல் மார்ச் வரை ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மற்றும் காலிகட் ரயில் நிலையிம் ஆகியவை ஆகும். அருகில் உள்ள ரயில் நிலையம் திருச்சூர் ரயில் நிலையம் ஆகும்.திருச்சூர் நகரிலிருந்தும், திருச்சூர் ரயில் நிலையத்திலிருந்தும் 2 கிமீ தொலைவில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. ஐந்து நிமிடத்திற்குள் ஆட்டோவில் வந்து சேர்ந்து விடும் வசதி உள்ளது.