தொளகி

தொளகி (Dawki) அல்லது தாகி (Dauki) என்பது இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு சைந்தியா மலை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

நிலவியல்

[தொகு]

இது இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான எல்லையில்[1] 25°11′0″N 92°1′0″E / 25.18333°N 92.01667°E / 25.18333; 92.01667 அமைந்துள்ளது, [2]

தொளகி எல்லை

[தொகு]

தொளகி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அல்லது தொளகி எல்லை கடப்பது என்பது, இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் மேற்கு சைந்தியா மலை மாவட்டத்தில் உள்ள இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான சாலை எல்லைப் பகுதியாகும். வங்காளதேசத்தில் தொடர்புடைய இடுகை தமாபில் அஞ்சல் ஆகும். தொளகி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க அடிக்கல் 2017-ல் நாட்டப்பட்டது.[3] இச்சோதனைச் சாவடி வங்காளளாதேசத்திற்கு நிலக்கரி போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனைச் சாவடி வழியாக தினமும் 500 சரக்குந்துகள் எல்லையைக் கடக்கின்றன.[4][5][6]

சில்லாங்கில் உள்ள லெதுவிலிருந்து எல்லைப் பகுதிக்கு சில பகிரப்பட்ட போக்குவரத்து வசதி உள்ளது. சில்லாங்கிலிருந்து 70 கிலோமீட்டர்கள் (43 mi) தொலைவிற்குப் பயணிக்கப் பேருந்து வசதி உள்ளது. எல்லை கடந்தபின் வங்காளதேசத்தில் தமாபில் பேருந்து நிலையம், 1.5 கிலோமீட்டர்கள் (0.93 mi) தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து சில்ஹெட் 55 கிலோமீட்டர்கள் (34 mi) ) தொலைவில் உள்ளது.

முக்கிய இடங்கள்

[தொகு]
தொளகில் உம்ங்கோட் நதி படகு சவாரி

தொளகி பாலம், உம்ங்கோட் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தொங்கு பாலமாகும். இதனை 1932ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கட்டினர்.[7]

தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதால் தரையில் கிடப்பன நன்கு தெரியும்.
தொளகி தொங்கு பாலம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A trip to Dawki: A hidden paradise and a friendly international border". 5 February 2016.
  2. http://wikimapia.org/559420/Dawki Wikimapia
  3. Dawki ICP foundation stone laid.
  4. "Travel and Tourism Information". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
  5. "Coal-laden trucks stranded on Bangladesh border". The Hindu Business Line, 13 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
  6. "Notification No. 63/94-Cus. (N.T.) dtd 21/11/1994 with amendments - Land Customs Stations and Routes for import and export of goods by land or inland water ways". Archived from the original on 2012-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-03-15.
  7. http://en.structurae.de/structures/data/index.cfm?id=s0010632 Dawki Suspension Bridge

வெளி இணைப்புகள்

[தொகு]