தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1] இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.[2]
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ |
ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் இவை.
இந்த இராகத்தில் அமைந்த தமிழ்பாட்டு ஒன்று கீழேத் தரப்படுகிறது. இதனை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
இராகம்:தோடி தாளம்:ரூபகம்
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்
தெய்வத் தமிழ்மொழிக்கு (திரு)
அநுபல்லவி
வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி
வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி
உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியனை மீதிருத்தி
அகலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்
முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செலவியவள சித்தம் குளிர்ந்திடவே (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார்
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் (திரு)
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம்[3] |
---|---|---|---|
கீதம் | கலைமகளே | பெரியசாமி தூரன் | ரூபகம் |
பதம் | தாயே யசோதா உந்தன் | ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் | ஆதி |
வர்ணம் | கனகாங்கி | பல்லவி கோபாலய்யர் | அட |
சுரஜதி | ராவேஹிமகிரி | சியாமா சாஸ்திரிகள் | ஆதி |
கிருதி | கமலாம்பிகே | முத்துசாமி தீட்சிதர் | ரூபகம் |
கிருதி | நீ வண்டி தெய்வமு | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | எந்துகு தயராதுரா | தியாகராஜ சுவாமிகள் | த்ரிபுட |
கிருதி | கார்த்திகேய காங்கேய | பாபநாசம் சிவன் | ஆதி |
கிருதி | கடைக்கண்நோக்கி | பாபநாசம் சிவன் | ஆதி |
கிருதி | ஆனந்த நடேசா | ராமஸ்வாமி சிவன் | ரூபகம் |
கிருதி | எந்நேரமும் ஒருகாலை | மாரிமுத்தாப் பிள்ளை | ஆதி |
அஷ்டபதி | ஸஞ்சரத தரஸூத | ஜெயதேவர் | ஆதி |