தோப்பில் முகமது மீரான் | |
---|---|
பிறப்பு | நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா | 26 செப்டம்பர் 1944
இறப்பு | 10 மே 2019 திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 74)
இருப்பிடம் | நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2010 |
வாழ்க்கைத் துணை | ஜலீலா மீரான் |
பிள்ளைகள் | சமீம் அகமது மிர்சாத் அகமது |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[2]
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார்.[3]
(முழுமையானதல்ல)