அருட்திரு தோமசு சவுந்தரநாயகம் Thomas Savundaranayagam | |
---|---|
யாழ்ப்பாண ஆயர் | |
![]() | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஆட்சி துவக்கம் | 6 சூலை 1992 |
ஆட்சி முடிவு | 13 அக்டோபர் 2015 |
முன்னிருந்தவர் | பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை |
பின்வந்தவர் | ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் |
பிற பதவிகள் | மன்னார் ஆயர் (1981-92) |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 13 சூலை 1938 ஊர்காவற்துறை, இலங்கை |
படித்த இடம் | பரப்புரைப் பல்கலைக்கழகம், உரோம் |
அருட்திரு இம்மானுவேல் தோமசு சவுந்தரநாயகம் (Emmanuel Thomas Savundaranayagam, பிறப்பு: 13 சூலை 1938) இலங்கைத் தமிழ் போதகரும், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.[1]
சவுந்தரநாயகம் 1938 சூலை 13 இல் இலங்கை, ஊர்காவற்துறையில் பிறந்தார்[2][3] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் யாழ்ப்பாணம் புனித மார்ட்டின் மடப்பள்ளியிலும், அம்பிட்டி தேசிய மடப்பள்ளியிலும் (1957-64) கல்வி கற்றார்.[3] ரோம் நகரில் பரப்புரைக் கல்லூரியில் புனித இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்[3]
சவுந்தரநாயகம் 1963 டிசம்பரில் போதகராக நிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1981 சனவரியில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியில் அமர்ந்தார். 1981 சூலையில் மடு மரியாள் ஆலயத்தில் மன்னார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1992 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][3] 2015 அக்டோபரில் பணியில் இருந்து இளைப்பாறினார்.[6]
இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக சவுந்தரநாயகம் குரல் கொடுத்து வந்துள்ளார்.[7][8] ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வர வெளிநாடுகள் தலையிட வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.[9]