தோர்னேரியா (Tornaria) என்பது ஏகோர்ன் புழுக்கள் போன்ற சில அரைமுதுகுநாணிகளின் மிதவைவாழிகளின்இளம் உயிரி ஆகும்.[1][2] இது நட்சத்திர மீன்களின் பைபின்னாரியா இளம் உயிரி தோற்றத்தினை மிகவும் ஒத்திருக்கிறது. குற்றிலையின சுருண்ட பட்டைகள் உடலைச் சுற்றி ஓடுகின்றன.[1] இது முட்டை வடிவினை உடையது. இந்த இளம் உயிரின் விட்டம் சுமார் 3 மி.மீ. ஆகும். நுனி ஒன்றில் தகடு ஒன்றைக் கொண்டுள்ளது. குற்றிலை நிறைந்த தடிமனான பகுதியும் ஒரு இணை கண் புள்ளிகளும் காணப்படுகிறது. இளம் உயிரிகள் முழுமையான உணவுக் கால்வாயைக் கொண்டுள்ளன. குற்றிலை பட்டைகள் முன்புற மற்றும் பின்புற பகுதி முழுவதும் நீண்டுள்ளது.
{{cite web}}
: |access-date=
requires |url=
(help); Missing or empty |url=
(help)