தோவாளை | |||
ஆள்கூறு | 8°13′52″N 77°30′22″E / 8.231200°N 77.506000°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 81 மீட்டர்கள் (266 அடி) | ||
குறியீடுகள்
|
தோவாளை (തോവാള) தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், தோவாளை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்[3]. இந்நகரம் திருநெல்வேலி-நாகர்கோவில் நெடுஞ்சாலையின் அருகே ஆரல்வாய்மொழி மற்றும் வெள்ளமடம் ஆகிய இரு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் நாகர்கோவில் ஆகும். இந்த ஊரின் மக்கள்தொகை 6000.[சான்று தேவை] மலர்களை விளைவிப்பதில் இந்த நகரம் இந்திய அளவில் பிரபலமான ஒன்று. இங்கு விளையும் மலர்களில் மல்லிகை மிக முக்கியமான மலர். அம்மலரில் (பிச்சி வெள்ளை அல்லது பிச்சிப் பூ) என்பது இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சுற்றுப் பகுதி மலர் சாகுபடியாளர்களின் மலர் விற்பனைச் சந்தை இந்த ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள மலையில் முருகன் கோயில் மற்றும் கருடகிரி சிவபெருமான் கோயில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தோவாளை செக்கர்கிரி மலையில் முனிவர்கள் வழிபட்டு வந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.[4][5]
தோவாளை செக்கர்கிரி மலையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலானது முனிவர்களால் உருவாக்கபட்ட மற்றும் வழிபட்ட கோவில் ஆகும். இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் சூரசம்ஹார திருவிழாவில் தோவாளை சூரசம்ஹாரம் மிகப்பெரிய மற்றும் திரளான மக்கள் மத்தியில் நடைபெறும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான அலங்காரத்தில் சூரனை வதம் செய்வார். அடுத்தபடியாக காவடி கட்டுதல் திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டி பக்தர்கள் செல்கிறார்கள்.
இக்கோவில் நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக கிருஷ்ண ஜெயந்தி நடத்தப்படுகிறது. இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 10 நாட்களும் ஓவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடத்துவது வழக்கம். முக்கிய திருவிழாவாக உறியடி திருவிழா 9 ஆம் நாளும், [(ஆறாட்டு]] 10 ஆம் நாளும் நடைபெறுகிறது.
இந்த ஊரில் நெல் விவசாயம், மலர் சாகுபடி மற்றும் செங்கல் சூளை ஆகியவை மிக முக்கியம் வாய்ந்த தொழிலாகும்.
இந்த கிராமத்தில் கிருஷ்ணன்புதூர் ஸ்ரீதேவிமுத்தாரம்மன் கோவிலில் குலசையைபோன்று தசரா மற்றும் மகிசாசூரசம்ஹாரம் விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இவ்விழாவானது புரட்டாசி மாதம் பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.[சான்று தேவை]