தோஸ்த் அலி கான் (Ali Dost Khan) , 1732 முதல் 1740 வரை கர்நாடகா நவாப் எனப்படும் ஐந்தாவது ஆற்காடு நவாப்பாக இருந்தவர்.[1] அவர் நவாப் சதாதுல்லா கானின் சகோதரனின் குலாம் அலி கானின் மகன் ஆவார். அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால்.தோஸ்த் அலிகானை வாரிசாக ஏற்றுக்கொண்டார். 1732 ஆம் ஆண்டு நவாப் சதாதுல்லா கானினின் மரணத்துக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார். இவர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான ஃபெர்மனின் ஆதரவையும் பெற்றார். மே, 1740ல் நடந்த போரில், மராத்தியப் படைத்தலைவர் இராகோஜியால் கொல்லப்பட்டார்.[2]